Onetamil News Logo

திருமணம் செய்யாமல் தன்னுடன் வாழ்ந்து வந்த காதலியை 35 துண்டுகளாக வெட்டி,18 நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்து, உடல் பாகங்களை வீசிய அதிர்ச்சி சம்பவம் 

Onetamil News
 

திருமணம் செய்யாமல் தன்னுடன் வாழ்ந்து வந்த காதலியை 35 துண்டுகளாக வெட்டி,18 நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்து, உடல் பாகங்களை வீசிய அதிர்ச்சி சம்பவம் 


திருமணம் செய்யாமல் தன்னுடன் வாழ்ந்து வந்த காதலியை 35 துண்டுகளாக வெட்டி, 18 நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்து, பின் உடல் பாகங்களை டெல்லி முழுவதும் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்தவர் அஃப்தாப் அமீன் பூனாவாலா. இவர் மும்பையிலுள்ள பிரபல கால் சென்டர் ஒன்றில் பணியாற்றி வந்தார். அங்கு அவருடன் பணியாற்றிய ஷ்ரத்தா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதுவே பின்நாட்களில் காதலாக மலர்ந்துள்ளது. இந்த காதலுக்கு ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
               அதனால் அஃப்தாப் – ஷ்ரத்தா இருவரும் டெல்லிக்கு குடிபெயர்ந்து, மெஹ்ராலி என்ற பகுதியில் தனி வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்தனர். ஷ்ரத்தா தனது குடும்பத்தினருடனான தொடர்பை முற்றிலுமாக துண்டித்துள்ளார். பலமுறை அவரது பெற்றோர்கள் தொடர்பு கொள்ள நினைத்தும் அவர்களால் ஷ்ரத்தாவை தொடர்பு கொள்ள முடியவில்லை.
                 சமூக வலைதளம் மூலம் ஷ்ரத்தா இருக்கும் முகவரியை கண்டுபிடித்த அவரது தந்தை விகாஸ் மதன், மெஹ்ராலியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார். ஆனால் வீட்டு பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் டெல்லி காவல்துறையினரிடம் தனது மகளை காணவில்லை என புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த டெல்லி காவல்துறையினர், அஃப்தாப்பிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், தான் ஷ்ரத்தாவை கொலை செய்துவிட்டதாக அஃப்தாப் கூறியுள்ளார்.
           ஷ்ரத்தா, அஃப்தாப்பிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு, நீண்ட நாட்களாக வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அஃப்தாப் அதற்கு சம்மதிக்காததால், இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த மே 18ஆம் தேதி இதே போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த அஃப்தாப் ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். மேலும் ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி, 18 நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்து, பின் டெல்லியில் உள்ள வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளார்.
             அஃப்தாப் கொடுத்த இந்த வாக்குமூலத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த டெல்லி காவல்துறையினர், அஃப்தாப் மீது கொலை வழக்குப்பதிவு செய்து ஷ்ரத்தாவின் உடல் பாகங்களைத் தேடி வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo