Onetamil News Logo

பேஸ்புக் மூலம் 10-க்கும் மேற்பட்ட பெண்களுடன் பழகி அவர்களுடன் உல்லாசமாக இருந்ததை ஆபாச வீடியோ எடுத்த வாலிபர்,காதல் மனைவிக்கு கூட்டு பாலியல் தொல்லை ;கைது

Onetamil News
 

பேஸ்புக் மூலம் 10-க்கும் மேற்பட்ட பெண்களுடன் பழகி அவர்களுடன் உல்லாசமாக இருந்ததை ஆபாச வீடியோ எடுத்த வாலிபர்,காதல் மனைவிக்கு கூட்டு பாலியல் தொல்லை ;கைது


 

செங்குன்றம்,2021 ஜனவரி 15 ;சென்னை அருகே பேஸ்புக் மூலம் பழகி 10-க்கும் மேற்பட்ட பெண்களுடன் பழகி அவர்களுடன் உல்லாசமாக இருந்து அதை ஆபாச வீடியோ எடுத்து அவரது நண்பர்களுக்கு பகிர்ந்த வாலிபர்,காதல் மனைவிக்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்தார். 
இதுகுறித்து அவனது மனைவி அளித்த புகாரில்   கூறியதாவது......நான், கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வருகிறேன். எனக்கு அயனாவரம் பாரதி நகர் 1-வது தெருவைச் சேர்ந்த கணேஷ் என்ற லவ்லி கணேஷ்(வயது 22) என்பவருடன் கடந்த 2017-ம் ஆண்டு முகநூலில் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது.எங்கள் காதல் விவகாரம் அறிந்த எனது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதையும் மீறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாங்கள் இருவரும் ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டோம்.எனது பெற்றோர், போலீசில் புகார் செய்தனர். அப்போது நான், காதல் கணவருடன் செல்வதாக போலீசாரிடம் கூறினேன். பின்னர் எனது 3 பவுன் நகைகளை அடமானம் வைத்து அதில் வந்த பணத்தை கொண்டு வில்லிவாக்கம் ராஜாஜி நகரில் வாடகைக்கு வீடு பார்த்து குடும்பம் நடத்தி வந்தோம்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு 18 வயது இளம்ெபண் ஒருவரை வீட்டுக்கு அழைத்து வந்த கணேஷ், அவர் எனது தோழி. உனக்கு துணையாகவும், வீட்டு வேலை செய்யவும் அழைத்து வந்ததாக கூறினார். ஆனால் அதன்பிறகு இருவரும் நெருக்கமாக பழகினர்.இதை நான் தட்டிக்கேட்டபோது எனது கணவர் என்னை அடித்து உதைத்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்தார். அதன்பிறகு எனது கண் எதிரேயே அந்த இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்தார்.அத்துடன், என்னை தனிஅறைக்குள் பூட்டி வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்தார். எனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி, எனது கைகள் இரண்டையும் கட்டியும், வாயில் துணியை வைத்து அடைத்தும் சித்ரவதை செய்தார்.நான் ஆடையின்றி இருக்கும்போது அதை வீடியோ எடுத்து அவரது நண்பர்களுக்கு அனுப்பி வைத்தார். அத்துடன் அவரது நண்பர்களையும் வீட்டுக்கு வரவழைத்து அவர்களுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தி எனக்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்தார். நான் கத்தி கூச்சலிட்டதால் அவரது நண்பர்கள் சென்று விட்டனர்.பின்னர் எனக்கு வலுக்கட்டாயமாக மதுபானம் கொடுத்து அருந்த சொன்னார். மேலும் என்னிடம், நீ எனக்கு 11-வது மனைவி. ஏற்கனவே நான், முகநூல் மூலம் பழகி 10 பெண்களிடம் உல்லாசம் அனுபவித்து, அதை எனது செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து எனது நண்பர்களிடம் பகிர்ந்து உள்ளேன் என்று கூறி அந்த பெண்களின் அந்தரங்க வீடியோவை என்னிடம் காட்டினார்.எனது கணவரால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்ட நான், வீட்டின் உரிமையாளர் உதவியுடன் அங்கிருந்து தப்பி எனது பெற்றோரிடம் சென்று நடந்தவற்றை கூறி அழுதேன். அதன்பிறகே போலீசில் புகார் செய்து உள்ளேன். எனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறி இருந்தார்.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து கணேசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார். மேலும் அவரது செல்போனை வாங்கி சோதனை செய்தபோது, அதில் குடும்ப பெண்கள், இளம்பெண்கள் என 10-க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் ஆபாச வீடியோக்கள் இருப்பதும், அதை அவரது நண்பர்களுக்கு பகிர்ந்ததும் உறுதியானது.திருமணம் ஆன குடும்ப பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட பெண்களின் வாழக்கையை சீரழித்ததுடன், காதல் மன்னனாக வலம் வந்த கணேஷ் என்ற லவ்லி கணேஷ் தற்போது அவரது காதல் மனைவி அளித்த புகாரில் போலீசாரிடம் சிக்கி உள்ளார்.அவரிடம் ஏமாந்த 10 பெண்கள் யார்? கணேசுடன் சேர்ந்து இளம்பெண்ணுக்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கணேசால் பாதிக்கப்பட்ட பெண்கள், போலீசில் புகார் செய்யலாம். அவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo