Onetamil News Logo

ஆத்தூர் அருகே கஞ்சா குடித்து மனைவி அடித்துக் கொலை ;ஆர்.டி.ஓ விசாரணை   

Onetamil News
 

ஆத்தூர் அருகே கஞ்சா குடித்து மனைவி அடித்துக் கொலை ;ஆர்.டி.ஓ விசாரணை   


தூத்துக்குடி 2019 அக்டோபர் 21 ;தூத்துக்குடி அருகே வடக்கு ஆத்தூர் மேல முடுக்குத்தெரு தங்க நாடார் காம்பௌண்ட் பகுதியை சார்ந்தவர் சங்கர் இவரது மனைவி ராமலட்சுமி (25),இவர்களுக்கு முகலியா(4),என்ற குழந்தை உள்ளது. கணவன் மனைவியிடை அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் கஞ்சா, மது போதையில் நள்ளிரவில் மனைவியை அடித்து வாயில் சூப்பர் வாஸ்மால்-யை ஊற்றி  கணவன் கொன்றதாக பெண்ணின் தாய் ஈஸ்வரி புகார் கூறியுள்ளார். திருமணம் முடிந்து 4 ஆண்டுகள் தான் கடந்துள்ளது. 
கணவர் சங்கருக்கு கஞ்சா மற்றும் மதுப்பழக்கம் இருந்தது. தினமும் போதையில் வந்து மனைவியிடம் தகராறு செய்வார். தட்டிக்கேட்டால் அவரை அடித்து உதைத்து சித்ரவதை செய்வார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மது குடித்து விட்டு வந்த சங்கர் மனைவியிடம் தகராறு செய்தார். ‘தினமும் குடித்து விட்டு வந்து இப்படி  கொடுமைப்படுத்துகிறீர்களே’ என்று ராமலட்சுமி கண்டித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சங்கர், அவரது கழுத்தை பிடித்து நெரித்து விஷத்தை வாயில் ஊற்றியுள்ளார். அவரது குழந்தை முகலியா செய்தியாளர்களிடம் கூறினார்.   
அதிகாலையில் மனைவி இறந்து கிடப்பது பற்றி உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.இதுகுறித்து ஆத்தூர் போலீசார் தற்கொலை என்று வழக்குப்பதிவு செய்து ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்றுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo