Onetamil News Logo

மனைவியை மற்ற நண்பர்களுடன் உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தும் கணவன்கள், பண்பாட்டை அழிக்கத்துடிக்கும் வாலிபர்கள் கைது,உயர் அதிகாரிகள், உட்பட தம்பதிகளை பகிர்ந்து கொள்ளும் குரூப் மூலம் சுமார் 1000 தம்பதிகள் ஈடுபட்டிருப்பதாக தகவல் 

Onetamil News
 

மனைவியை மற்ற நண்பர்களுடன் உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தும் கணவன்கள், பண்பாட்டை அழிக்கத்துடிக்கும் வாலிபர்கள் கைது,உயர் அதிகாரிகள், உட்பட தம்பதிகளை பகிர்ந்து கொள்ளும் குரூப் மூலம் சுமார் 1000 தம்பதிகள் ஈடுபட்டிருப்பதாக தகவல் 


சமூக வலைத்தளங்களில் வாட்ஸ்அப் குரூப் இன்டர்காம் குரூப் என ஏற்படுத்தி,தங்களது மனைவிகளை விபச்சாரத்துக்கு அனுப்பி தொழில் செய்யும் ஏழு வாலிபர்களை கேரளா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.                                                                                         
        கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரி நகரில் வசிக்கும் ஒரு இளைஞர் தனது மனைவியை கடந்த இரண்டு வருடமாக மற்ற நபர்களுடன் உறவு வைத்துக் கொண்டு பணம் வாங்கி வா என கூறி துன்புறுத்தியுள்ளார்.இதற்கு அந்த இளம்பெண் மறுப்பு தெரிவித்து வந்தார். இந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலையும் அந்த வாலிபர் தனது மனைவியை வேறு ஒரு இடத்திற்கு அழைத்துசென்று, அங்கு இருந்த மற்ற நண்பர்களுடன் உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தி உள்ளார். அதற்கு அந்த பெண் மறுத்ததுடன் கோபத்துடன் வெளியேறி கருகச்சால் காவல் நிலையத்திற்கு சென்று கணவர் மீது புகார் கொடுத்தார். போலீசார் கணவரை அழைத்து விசாரணை செய்தனர். அப்போது அந்த வாலிபர் அளித்த விவரங்கள் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.                                                                                   

போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன ; சில நேரங்களில் ஒரு பெண்ணை 3 ஆண்கள் பகிர்ந்து கொண்ட சம்பவமும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவங்களில் மனைவிகளை மற்ற ஆண்களுக்கு அளிக்கும் நபருக்கு பணம் கிடைக்கிறது.பணத்திற்காக நண்பர்கள் வீட்டில் வைத்து மனைவிகளை மாற்றிக் கொள்ளும் அவலம் கேரளாவில் நடந்து வந்துள்ளது. இதுதொடர்பாக 7 பேரை கைதுசெய்துள்ள போலீசார், இந்த வெட்கக்கேடான செயலில் சுமார் 1000 தம்பதிகள் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர்.                                                                                                                                                          
                 கருக்காச்சலை பகுதியை சேர்ந்த அந்தப் பெண், தனது கணவர் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் 'தம்பதிகளை பகிர்ந்து கொள்ளும் குரூப்' என்ற ஒரு குழு டெலிகிராம் ஆப்பில் இயங்கி வருவதாகவும், அதில் தனது கணவரும் உறுப்பினராக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.மேலும், அவருடைய கணவர், மற்ற ஆண்களுடன் வலுக்கட்டாயமாக உடலுறவு வைத்துக்கொள்ள வற்புறுத்தியதாக கூறியிருந்தார். 
டெலிகிராம் ஆப்பில் 'தம்பதிகளை பகிர்ந்து கொள்ளும்' (Couple Sharing )குழு செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 1000-க்கும் அதிகமான தம்பதிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் ஆண்கள் தங்களது மனைவிகளை மற்ற ஆண்களுடன் பரிமாறிக் கொண்டுள்ளனர். அவர்களும், மற்றவர்களின் மனைவிகளுடன் உடலுறவு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 7 பேர் 3 மாவட்டங்களை சேர்ந்தவர்கள். சம்பந்தப்பட்ட டெலிகிராம் குரூப்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அவர்களில் சிலர் உயர் அதிகாரிகள், தனியார் துறையில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் ஆவர்.
முதலில் டெலிகிராமில் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் நபர்கள், பின்னர் 2, 3 தம்பதிகளாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்திக்கின்றனர். அந்த நேரத்தில் கணவன், மனைவிகள் பரிமாற்றம் நடக்கிறது. சில நேரங்களில் ஒரு பெண்ணை 3 ஆண்கள் பகிர்ந்து கொண்ட சம்பவமும் எங்களது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவங்களில் மனைவிகளை மற்ற ஆண்களுக்கு அளிக்கும் நபருக்கு பணம் கிடைக்கிறது.
'ஸ்டட்ஸ்' என்று ரகசிய சொற்களால் அழைக்கப்படும் இந்தக் குழுவில் சேர, ரூ.14,000 செலுத்த வேண்டும். போலியான ப்ரொபைல் மற்றும் பெயர்களில் உறுப்பினர்களை தொடர்பு கொள்ள போலி சுயவிவரப் பெயர்களைப் (Fake ID)பயன்படுத்துகின்றனர்.
குடியிருப்புகள், ஓய்வு விடுதிகள் மூலம் இவர்கள் சந்திப்பு நடைபெற்று வருகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த தம்பதிகளும் இதில் அங்கம் வகிக்கின்றனர்.இதுதொடர்பாக மேலும் 25 நபர்களை கண்காணித்து வருகிறோம். இந்த குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டவர்கள், வேறு ஏதேனும் குற்றச் செயல்களில் தொடர்புடையவர்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
போலீசார் அந்த வாலிபரை தீவிர விசாரணை செய்ததில், நாங்கள் சமூக வலைத்தளங்களில் குடும்ப விழா என்ற பெயரில் குரூப் தொடங்கி செயல்பட்டு வருகிறோம். இந்த குரூப்பில் தற்போது 2000 பேர் அங்கத்தினராக செயல்பட்டு வருகிறார்கள்.
இங்கு நாங்கள் வாரத்திற்கு மூன்று நாள் ஏதாவது ஒரு நண்பர்கள் வீட்டில் குடும்ப விழா என்ற பெயரில் விருந்து ஏற்பாடு செய்வோம் அப்போது அந்த விழாவில் கலந்துகொள்ள ஏராளமான நண்பர்களை கலந்து கொள்ள அழைப்பு விடுப்போம். 
குறிப்பிட்ட நாளில் நடைபெறும் இந்த விழாவில் சுமார் நூற்றுக்கும் மேல் நண்பர்கள் கலந்து கொள்வார்கள். அங்கு நண்பர்களுக்கு மது,பிரியாணி என அனைத்து வகைகளையும் ஏற்பாடு செய்வோம். அப்போது அங்கு நாங்கள் அழைத்துச் சென்றுள்ள எங்களது மனைவிகளை அந்த நண்பர்களுடன் உறவு வைத்துக் கொண்டு பணம் பரிப்பது வழக்கம். 
நிகழ்ச்சிகள் ஓட்டல், லாட்ஜ் என்ற இடங்களில் நடந்தால் மற்றவர்களுக்கும் போலீசாருக்கும் சந்தேகம் ஏற்படும் என்பதால் குறிப்பிட்ட நண்பர்களுடைய வீட்டை தேர்ந்தெடுப்பது வழக்கம். இதன் மூலம் எங்களுக்கு ஆயிரக்கணக்கான பணம் வருமானம் கிடைக்கிறது. அதன் மூலம் நாங்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம் என அந்த வாலிபர் போலீசில் தெரிவித்தார்.
இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் வாலிபரின் செல்போனை வாங்கி பரிசோதனை செய்தபோது, அதில் 2 ஆயிரத்துக்கும் மேல் உறுப்பினர்கள் இருப்பது தெரியவந்தது.கேரளாவில் 'ஜோடி யை மாற்றி கொள்ளும் வாட்ஸ் அப் குழு இயங்குகிறது. சுமார் 1,000 ஆண்கள் தங்கள் மனைவிகளை உடலுறவுக்காக மாற்றிக் கொள்ள தயாராக உள்ளனர் என்று காவல்துறை கூறுகிறது. ஒரு நபர் அந்த குரூப்பில் உள்ள வாலிபருக்கு போன் செய்து உனது மனைவியை அனுப்பி வை என வேண்டுதல் வைத்தால், அப்போது அவரின் மனைவி பிசியாக இருக்கும்போது, வேறு மனைவியை அழைத்து அனுப்பி வைப்பதும் இவர்களுடைய பழக்கம். 
விசாரணை நடத்தியதில், சில அரசு உயரதிகாரிகளும், தனியார் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளும் இந்த குரூப்பில் அங்கத்தினர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது என போலீசார் தெரிவித்தனர். இதையொட்டி வாலிபரை விசாரித்து, அதன் மூலம் மொத்தம் 7 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பலரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த விசாரணையின் மூலம் பல ரகசியங்கள் வெளிவரும் என கோட்டையம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo