Onetamil News Logo

மாவட்டத்தில் பணிபுரியும் தகுதி வாய்ந்த பத்திரிகையாளர்களுக்கு அங்கீகாரஅட்டை வழங்கப்படும் ; அமைச்சர் கடம்பூர் ராஜூ சட்டசபையில் பேச்சு 

Onetamil News
 

மாவட்டத்தில் பணிபுரியும் தகுதி வாய்ந்த பத்திரிகையாளர்களுக்கு அங்கீகாரஅட்டை வழங்கப்படும் ; அமைச்சர் கடம்பூர் ராஜூ சட்டசபையில் பேச்சு 


சென்னை  2020 மார்ச் 23 ;தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செய்தி மற்றும் விளம்பரம் அறிவிப்புகள் ;2020-2021 செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று  சட்டசபையில் பேசினார்.மேலும் அவர் பேசியதாவது.....
1.மாவட்ட தலைநகரில் பணிபுரியும் தகுதி வாய்ந்த பத்திரிகையாளர்களுக்கு செய்தியாளர் அங்கீகார அட்டை வழங்கப்படும். 
சென்னை மாநகரில் பணிபுரியும் தகுதி வாய்ந்த பத்திரிகையாளர்களுக்கு தற்போது செய்தியாளர் அங்கீகாரஅட்டை (Accreditation Card)  வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல மாவட்ட தலைநகரில் பணிபுரியும் தகுதி வாய்ந்த பத்திரிகையாளர்களுக்கு  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு,  முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி,  செய்தி மக்கள் தொடர்புத்துறையின் தலைமையிடத்திலிருந்து செய்தியாளர் அங்கீகாரஅட்டைவழங்கப்படும்.
2.சுவாமி சகஜானந்தா,  பட்டுக்கோட்டைஅழகிரிசாமி, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு, இராமசாமி படையாட்சியார், டாக்டர் பா.சிவந்திஆதித்தனார்  ஆகியோரது பிறந்தநாள்விழா ரூ.50 ஆயிரம் செலவில் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும். 
 முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி,  சுவாமி சகஜானந்தா (ஜனவரி 27), இராமசாமிபடையாட்சியார்  (செப்டம்பர் 16); பட்டுக்கோட்டைஅழகிரிசாமி (ஜுன் 23), உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு (பிப்ரவரி 6);  டாக்டர் பா.சிவந்திஆதித்தனார் (செப்டம்பர் 24) ஆகிய பெரியோர்களின் பிறந்தநாள் விழாக்கள், முறையே கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும்  மஞ்சக்குப்பம், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, கோவை மாவட்டம் வையம் பாளையம், தூத்துக்குடிமாவட்டம் திருச்செந்தூர் ஆகியஇடங்களில், தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ;ரூ.50 ஆயிரம் செலவில் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும்.
3..சென்னை, தியாகராயநகரில்உள்ளபெருந்தலைவர் காமராஜர் இல்லம் ,ரூ.7 இலட்சம் செலவில்சீரமைக்கப்படும். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு,  முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, சென்னை, தியாகராயநகரில்உள்ளபெருந்தலைவர் காமராஜர் இல்லத்தில் வர்ணம் பூசுதல்மற்றும் மேற்கூரை சீரமைத்தல் முதலான சீரமைப்புபணிகள் ரூ.7 இலட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.
4. சென்னை, கிண்டி காந்தி மண்டபவளாகத்தில்உள்ளவ.உ.சி. செக்குசீரமைத்தல், இராஜாஜி நினைவாலயம் மற்றும் இராஜாஜிநூலகம் புனரமைத்தல் மற்றும் மின் பணிகள் ரூ.10 இலட்சம் செலவில் மேற்கொள்ளப்படும். 
 புரட்சித்தலைவிஅம்மாஅவர்களின் ஆசியோடு,  முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்திலுள்ள, தியாகி வ.உ.சி., ஆங்கிலேயர் காலத்தில் சிறையில் இழுத்த செக்கு சீரமைத்தல், இராஜாஜி நினைவாலயம் மற்றும்  இராஜாஜிநூலகம் புனரமைத்தல் மற்றும் அவ்வளாகத்தில் உள்ள நினைவகங்களில் மின்பணிகள் மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் ரூ.10 இலட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.
5. சென்னை கலைவாணர் அரங்கம் மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் கண்காணிப்புக் கேமராக்கள் ரூ.16 இலட்சம் செலவில் பொருத்தப்படும். 
 முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் ரூ.10 இலட்சம் செலவிலும், வள்ளுவர் கோட்டத்தில் ரூ.6 இலட்சம் செலவிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும்.
6. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில்அமைந்துள்ள மகாமகம் பல்நோக்கு கலையரங்கம் ரூ.12 இலட்சம் செலவில் புதுப்பொலிவுடன் மேம்படுத்தப்படும். 
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு,  முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி,தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ள மகாமகம் பல்நோக்கு கலையரங்கத்தில் உணவு அருந்தும் அறையின் மேற்கூரையின் உயரத்தை உயர்த்துதல், மின்சார இணைப்பினை மாற்றுதல், பாதாளசாக்கடை அமைப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் ரூ.12 இலட்சம் செலவில்மேற்கொள்ளப்படும்.
7. சிவகங்கை மாவட்டத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவுமண்டபம் மற்றும் வீரத்தாய் குயிலி நினைவுச் சின்னம் அமைந்துள்ள வளாகம் ரூ.17 இலட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.  முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, சிவகங்கை மாவட்டத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம் மற்றும் வீரத்தாய் குயிலி நினைவுச் சின்னம் அமைந்துள்ள வளாகத்தில், வாழ்க்கை வரலாற்று குறிப்புகள் வைத்தல், அலுவலகக் கட்டடம் கட்டுதல், குடிநீர் வசதிமற்றும் கழிப்பறைவசதிமேம்படுத்துதல்ஆகியபணிகள் ரூ.17 இலட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.
8. எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில்ரூ.1 கோடியே 30 இலட்சம் செலவில் 2வது தளம் புதிதாககட்டப்படும்.  
 புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு,  முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி,எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில், 12 தங்கும் அறைகள், கழிப்பறைகள்,  மனமகிழ்அறை போன்றவசதிகளுடன் ரூ.1 கோடியே 30 இலட்சம் செலவில் 2வது தளம் புதிதாக கட்டப்படும்.   
9. எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களின் படப்பிடிப்புத் தளத்தில் புதியஅரங்கஅமைப்புகள்மற்றும்    ஒளியமைப்பிற்கான பாதுகாப்பு நடைமேடைரூ.22 இலட்சம் செலவில் அமைக்கப்படும்.
 புரட்சித்தலைவி அம்மாஅவர்களின் ஆசியோடு,  முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, எம்.ஜி.ஆர். அரசுதிரைப்படம் மற்றும் தொலைக்காட்சிபயிற்சி நிறுவனத்தில் மாணவர்களின் செயல்முறை படப்பிடிப்பு பயிற்சிக்காகவும், குறும்படம் தயாரிப்புக்காகவும்  அமைந்துள்ள மாணவர்களுக்கான படப்பிடிப்புதளத்தில் நவீன முறையில் மாற்றியமைக்கும்  மடங்கு அரங்கம்  மற்றும் ஒளியமைப்பிற்கான பாதுகாப்புநடைமேடை  ரூ.22 இலட்சம் செலவில்அமைக்கப்படும்.
10. தலைமைச் செயலகத்தில்உள்ள மேற்கோள் பிரிவு கணினி, பிரிண்டர், ஸ்கேனர் போன்ற நவீன கருவிகளுடன் ரூ.9 இலட்சத்து 50 ஆயிரம் செலவில் புனரமைக்கப்படும்.  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு,  முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, தலைமைச் செயலகத்தில்அமைந்துள்ள மேற்கோள் பிரிவு கணினி, பிரிண்டர், ஸ்கேனர் போன்ற நவீன கருவிகளுடன் ரூ.9 இலட்சத்து 50 ஆயிரம் செலவில் புனரமைக்கப்படும்.  
11. மேற்கோள் பிரிவில் செய்தி நறுக்குகள்ரூ.3 இலட்சத்து 25 ஆயிரம் செலவில் தொகுப்பு புத்தகமாக பைண்டிங் செய்து பாதுகாக்கப்படும்.
முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, மேற்கோள்பிரிவில்பராமரிக்கப்படும் நாளிதழ்களின் முக்கியசெய்திகள், முதலமைச்சரின் அறிவிப்புகள், உரைகள், செய்தியாளர் சந்திப்பு, அரசின் சாதனைகள், அரசுநலத்திட்டஉதவிகள், நாளிதழ்களின் தலையங்கங்கள், கட்டுரைகள், விமர்சனங்கள் மற்றும் பல்வேறு தலைவர்களின் கருத்துக்கள் போன்ற செய்தி நறுக்குகள் ரூ.3 இலட்சத்து 25 ஆயிரம் செலவில் தொகுப்பு புத்தகமாக பைண்டிங் செய்து பாதுகாக்கப்படும். 
12. தலைமைச் செயலகத்தில் உள்ள ஊடக மையம் நவீன தொழில்நுட்பக் கருவிகள் ரூ.14 இலட்சம் செலவில் கொள்முதல் செய்து மேம்படுத்தப்படும். 
அனைத்து அரசு நிகழ்ச்சிகளையும் வீடியோ மூலம் ஒளிப்பதிவு செய்து அவற்றை தொகுத்து, அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளுக்கு பதிவேற்றம் செய்தல், அனைத்து மாவட்டஆட்சியர் அலுவலகங்களில் உள்ள எல்இடிடி.வியின் மூலம்  கள விளம்பரப் பணிகள் மேற்கொள்ளுதல்ஆகிய பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள   முதலமைச்சர்   ஆணைப்படி, ரூ.14 இலட்சம் செலவில் நவீன தொழில்நுட்பக்கருவிகள் கொள்முதல் செய்து தலைமைச் செயலக ஊடகமையம் மேம்படுத்தப்படும். 
13. தமிழரசு அச்சகத்தில் பணிபுரியும் தொழில்நுட்பப் பணியாளர்களுக்காக ரூ.37 இலட்சத்து 50 ஆயிரம் செலவில் உணவு அருந்தும் அறை புதிதாக கட்டப்படும். 
 புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு,  முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, தமிழரசு அச்சகத்தில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் தொழில் நுட்பப் பணியாளர்களுக்கு தனித்தனியாக
உணவு அருந்தும் அறை ரூ.37 இலட்சத்து 50 ஆயிரம் செலவில் புதிதாக கட்டப்படும்.
14. தமிழரசு அச்சகத்தில் கணினியிலிருந்து தட்டுகள் உருவாக்கும் இயந்திரம் அமைந்துள்ளஅறையின் மேற்கூரையை சீரமைத்தல் மற்றும்   இவ்வளாகத்தில்உள்ள சுற்றுச்சுவரைஉயர்த்துதல் ஆகியபணிகள் ரூ.15 இலட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.  
 முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி,  தமிழரசு அச்சகத்தில் கணினியிலிருந்து தட்டுகள் உருவாக்கும் இயந்திரம்  அமைந்துள்ள அறையின் மேற்கூரையை சீரமைத்தல் மற்றும் பாதுகாப்பு நலன் கருதி தமிழரசு அச்சகத்தின் சுற்றுச்சுவரை உயர்த்துதல்ஆகியபணிகள் ரூ.15 இலட்சம் செலவில்மேற்கொள்ளப்படும். 
15. எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் உள்ள படப்பிடிப்பு நடத்தப்படும் சாலை ரூ.20 இலட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.  
 முதலமைச்சர்  ஆணைப்படி, எம்.ஜி.ஆர். அரசுதிரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் உள்ள படப்பிடிப்பு நடத்தப்படும் சாலை ரூ.20 இலட்சம் செலவில் மேம்படுத்தப்படும். 
16. எம்.ஜி.ஆர். அரசுதிரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களின் பயன்பாட்டிற்கு ரூ.3 இலட்சத்து 80 ஆயிரம் செலவில் நாற்காலிகள் கொள்முதல் செய்யப்படும்.  
எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில்
2016-2017ஆம் கல்வியாண்டுமுதல் """"இளங்கலைகாட்சிக்கலை"" நான்காண்டுபட்டப்படிப்பில்பயிலும் மாணவர் நலன் கருதி,  புரட்சித்தலைவி அம்மாஅவர்களின் ஆசியோடு,  முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, ரூ.3 இலட்சத்து 80 ஆயிரம் செலவில் தேவையான நாற்காலிகள் கொள்முதல் செய்யப்படும். 

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo