Onetamil News Logo

சுகாதாரமற்ற வகையில் வடை, பஜ்ஜி விற்பனை செய்தால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை ;புகார் வாட்ஸ் அப் எண்.9444042322

Onetamil News
 

சுகாதாரமற்ற வகையில் வடை, பஜ்ஜி விற்பனை செய்தால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை ;புகார் வாட்ஸ் அப் எண்.9444042322


தூத்துக்குடி 2020 ஜன 24 ; தூத்துக்குடி மாவட்டத்தில் தேநீர் கடைகள், ஹோட்டல்களில் வடை பஜ்ஜி போன்ற உணவுப் பொருட்களை சுகாதாரமற்ற வகையில் திறந்த நிலையில் வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உணவு வணிகர்கள் தங்களது வளாகங்களில் வடை பஜ்ஜி போன்ற உணவுப் பொருட்களை சுகாதாரத்தை பேணும் வகையில் முறையாக முடிவைக்க வேண்டும். திறந்த நிலையில் வைத்திருந்தால் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மூலம் அபராதம் விதிக்கப்படும். அதுபோல தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை,நிகோடின் கலந்த உணவுப்பொருட்களை விற்பனை செய்தல் கூடாது. விற்பனை செய்வது கண்டறியப்படால் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்கள். 
தமிழ்நாடு மாநில உணவு பாதுகாப்பு ஆணையாளர் மாவட்ட உணவு நியமன அலுவலர்களுக்கு, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன்; கீழ் விதிகளை மீறி செயல்படும் உணவு வணிகர்களுக்கு இச்சட்டத்தின் பிரிவு 69-ன் கீழ் அபராதம் விதிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி தேநீர் கடைகள்,பேக்கரி, ஹோட்டல, சில்லறை விற்பனையாளர்கள் போன்ற உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டங்களின் கீழ் விதிக்கப்பட்ட ஒழுங்குமுறைகளுக்கு புறம்பாக உணவு வணிகம் புரிந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். 
அதன்படி எந்த ஒரு உணவு வணிகராவது வடை பஜ்ஜி போன்ற உணவுப் பொருட்களை முறையாக மூடி வைக்காமல் திறந்து வைத்து வியாபாரம் செய்தாலோ, சுகாதாரமற்ற சூழ்நிலையில் உணவு பொருட்களை தயாரித்தாலோ,தடை செய்யப்பட்ட புகையிலை,நிகோடின் கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்தாலோ, கலப்பட பொருளை வைத்திருந்தாலோ அவ்வணிகர்களுக்கு அபராதம் விதிக்கப்படும், மேலும் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் ரத்தும் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 
உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன்படி உணவு தரம் அல்லாத பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தல்,பொட்டலமிட பயன்படுத்தும் உணவு வணிகர்கள் 58 2000 5000 10000 மற்றும் பதிவு ரத்து செய்யப்படும். நுகர்வோர்கள் உணவு பாதுகாப்பு குறித்து புகார் செய்ய விரும்பினால் உணவு பாதுகாப்பு துறையின் மாநில வாட்ஸ் அப் எண்.9444042322 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo