Onetamil News Logo

நடிகர் பிரதாப் போத்தன் மரணம் ;2 மனைவிகளை விவாகரத்து செய்ததால் தனிமையில் வாழ்ந்து மறைந்தார்.

Onetamil News
 

நடிகர் பிரதாப் போத்தன் மரணம் ;2 மனைவிகளை விவாகரத்து செய்ததால் தனிமையில் வாழ்ந்து மறைந்தார்.


நடிகர் பிரதாப் போத்தன் காதலித்து திருமணம் செய்து கொண்ட 2 மனைவிகளை விவாகரத்து செய்தார்.முடிவில் மறைந்தார்.
                    தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்தவர் பிரதாப் போத்தன். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிரதாப் போத்தன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 69. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
             சினிமாவில் பல்வேறு வெற்றிகளைக் குவித்த பிரதாப் போத்தனுக்கு, சொந்த வாழ்க்கை அவ்வளவு வெற்றிகரமானதாக அமையவில்லை. குறிப்பாக இவர் இயக்கிய முதல் படம் ‘மீண்டும் ஒரு காதல் கதை’. படத்தின் தலைப்பை போலவே இவரது காதல் கதை ஆரம்பித்ததும் இந்த படத்தில் தான். இப்படத்தை தயாரித்த நடிகை ராதிகா மீது காதல் வயப்பட்டார் பிரதாப் போத்தன்.
                1985-ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. அந்த சமயத்தில் இவர்களைப் பற்றிய காதல் கிசுகிசுக்களும் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து கிசுகிசுகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருவரும் அதே ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி ஒரே ஆண்டில் விவாகரத்து செய்துகொண்டது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
                  ஏனெனில் அந்த காலகட்டத்தில் திருமணமான ஒரே ஆண்டில் விவாகரத்து செய்துகொண்ட நடிகை என்றால் அது ராதிகா தான். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் இவர்களின் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததை அடுத்து 1990-ம் ஆண்டு அமலா சத்யநாத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் பிரதாப் போத்தன். இவர்களுக்கு கேயா போத்தன் என்கிற மகளும் உண்டு. கடந்த 2012-ம் ஆண்டு இரண்டாவது மனைவியையும் நடிகர் பிரதாப் போத்தன் விவாகரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.                           1952ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன். 1978ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஆரவம் படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் முதன்முறையாக 1979ம் ஆண்டு அழியாத கோலமங்கள் படத்தின் மூலம் தோன்றினார்.   இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் 100க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
                 பிரதாப் போத்தன் தமிழில் மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு,  குடும்பம் ஒரு கதம்பம், புதுமைப்பெண், ஜல்லிக்கட்டு, படிக்காதவன் பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள் ,போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் மார்த்தாண்டன், ஜீவா, வெற்றி விழா, சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட படங்களை பிரதாப் போத்தன் இயக்கியுள்ளார்.  இருப்பினும், சத்யராஜ் நடித்த ஜீவா, மகுடம், கார்த்திக் நடித்த லக்கி மே  உள்ளிட்ட படங்களுக்கு இவருக்கு அடுத்தடுத்து தோல்வியை தந்தது. 
                 இவர் திரைப்பட நடிகை ராதிகாவோடு இணைந்து மீண்டும் ஒரு காதல் கதை படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து, இருவரும் நண்பர்கள் துணையோடு, உற்றார் உறவினர்கள் முன்னிலையில் 1985ல் திருமணமும் செய்து கொண்டனர். ஆனால், சில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 1986ம் ஆண்டு  விவாகரத்து பெற்றுவிட்டனர். இவர்களது விவாகரத்து சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
                 இதையடுத்து, 1990ம் ஆண்டு அமலா சத்யனாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், 2012ல் இவர்களது திருமண வாழ்கை முடிவுக்கு வந்தது. இந்த தம்பதியினருக்கு கேயா எனும் மகள் உள்ளனர்.
       இந்த நிலையில், இவருக்கு சினிமாவை போன்று குடும்ப வாழ்கை வெற்றியாக இல்லாமல் போனதால், சமீப காலமாக சென்னையில் உள்ள தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்த இவர், இன்று காலை இறந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி அறிந்து அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.10-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவரும், 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவருமான பிரதாப் போத்தன், இன்று காலை 8 மணி அளவில் உயிரிழந்தார். 69 வயதாகும் இவர் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றில் தனியாக வசித்து வந்த நிலையில், காலை வெகு நேரமாகியும் இவர் எழ தாமதமானதால் இவருடைய சமையல்காரர் காபி போட்டு இவரது அறைக்கு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது பிரதாப் போத்தன் சுயநினைவின்றி மெத்தையில் படித்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தட்டி எழுப்பியும், முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்தும் எழாததால், உடனடியாக இது குறித்து பிரதாப் போத்தனின்கார் ஓட்டுனருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து, பிரதாப் போத்தனை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் இவரை சோதனை செய்து விட்டு, ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் பிரதாப் போத்தன் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து இவரது உடல் அஞ்சலிக்காக இன்று அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளைய தினம் வேலங்காடு இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அதே போல் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் இவர் கடைசியாக போட்ட முகநூல் பதிவும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 
இதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், வருங்கால சங்கதியினர் குறித்தும் சிரித்து கொண்டே அழும் ஸ்மைலியுடன் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில்... பெருக்கல் என்பது ஒரு விளையாட்டு, ஒவ்வொரு தலைமுறையும் ஒரே மாதிரியாக தான் விளையாடி வருகிறார்கள் என தெரிவித்துள்ளார். அதே போல் ஞாயிற்று கிழமை அன்று மரணம் குறித்து இவர் போட்டுள்ள பதிவு ஒன்றும் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo