Onetamil News Logo

நடிகை குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகி, பாஜக-வில் இணைந்தார்

Onetamil News
 

நடிகை குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகி, பாஜக-வில் இணைந்தார்


டெல்லி 2020 அக்டோபர் 12 ;காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு, பாஜக,வில் சேர்வதற்காக டில்லியில் உள்ள பாஜக அலுவலகம் வந்தார். பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார். தொடர்ந்து அவர் தேசிய செயலர் ரவி முன்னிலையில் சேர்ந்தார். உடன் மாநில பா.ஜ., தலைவர் முருகன் உடன் இருந்தார். 
                             பாஜக பொதுச்செயலாளர் ரவி முன்னிலையில் நடிகை குஷ்பூ பாஜக-வில் இன்று இணைந்தார். பாஜகவில் நடிகை குஷ்பு இணையும் நிகழ்ச்சியில் தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பங்கேற்றார். இன்று காலை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதை அடுத்து, தற்போது பாஜக நடிகை குஷ்பு இணைந்துள்ளார். இதைத்தொடர்ந்து பேசிய நடிகை குஷ்பு நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி என்று கூறினார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற சிறப்பாக பாடுபடுவேன். மேலும் பிரதமர் மோடி மாதிரியான ஒரு தலைவரால் தான் நாடு முன்னேற முடியும் என நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

இதையடுத்து பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பாஜக ஆட்சி தமிழகத்திலும் வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள் என்று  அவர் கூறியுள்ளார்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo