Onetamil News Logo

நடிகை நமிதாக்கு டும் ...டும் ...நவ 24 ம் தேதி ;மச்சான்ஸ் எனக்கு கல்யாணமுங்க.. மியா கதாநாயகன் 

Onetamil News
 

நடிகை நமிதாக்கு டும் ...டும் ...நவ 24 ம் தேதி ;மச்சான்ஸ் எனக்கு கல்யாணமுங்க.. மியா கதாநாயகன் 


                                                                                                                                                  சென்னை நவம்பர்  11 ; 2004-ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘எங்கள் அண்ணா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு  நடிகை  நமிதா அறிமுகமானார். 
                                                                                                                                                இவர் விஜயகாந்த், விஜய், சரத்குமார் மற்றும் சத்யராஜ் போன்ற முக்கியமான நட்சத்திரங்கள் பலருடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது அவர் ‘பொட்டு’ மற்றும் ‘மியா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ‘மியா’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் வீரேந்திரா என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. அவரை திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார் நமிதா.
இதுகுறித்து அவர், கூறியதாவது..“‘நானும் மணப்பெண்ணாகப் போகிறேன். எங்கள் திருமணம் வரும் நவம்பர் 24–ஆம் தேதி நடைபெறவுள்ளது. திருப்பதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்க அனுமதி அளித்துள்ளார் வீரா” என தெரிவித்தார். வீரேந்திரா மாடலாக உள்ளார், நமிதா உடனான படத்துக்கு பிறகு அவரும் திரைத்துறை சார்ந்தே இயங்கவிருக்கிறார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo