Onetamil News Logo

நடிகை கவுசல்யாவுக்கு 38 வயது ;திருமணம் செய்ய மாப்பிள்ளை தேடுகிறார்.....

Onetamil News
 

நடிகை கவுசல்யாவுக்கு 38 வயது ;திருமணம் செய்ய மாப்பிள்ளை தேடுகிறார்.....


தமிழ் பட உலகில் 1990 மற்றும் 2000 ஆண்டுகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த 38 வயதாகும் நடிகை கவுசல்யா விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார்.
தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்த, ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் ஏறத்தாழ முப்பது தமிழ், கன்னட, தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பெங்களூரில் பிறந்தவர்.
 
கௌசல்யா, 1996 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான ஏப்ரல் 19 ல் பாலச்சந்திர மேனன் அவர்களால் அறிமுகப்படுத்தப் பட்டார். அடுத்த ஆண்டு, அவர் தனது முதல் தமிழ் படம் காலமெல்லாம் காதல் வாழ்க திரைப்படத்தில் நடித்தார். பல வெற்றிகரமான தமிழ் மற்றும் மலையாளம் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பூவேலி திரைபடத்தில் அவரது நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார். முன்னணி பாத்திரங்களில் தமிழ் மற்றும் மலையாளத்தில் 30 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
காலமெல்லாம் காதல் வாழ்க ,நேருக்கு நேர்,அகிலா, சொல்லாமலே, லேலம் கவுரி பார்வதி மலையாளம், பிரியமுடன் பிரியா, ஜாலி ,பூவேலி ,மகாலக்சுமி,உன்னுடன் உட்பட பல படங்கள் நடித்துள்ளார்.
 
தற்போது கவுசல்யாவுக்கு 38 வயது ஆகிறது. இதனால் அக்காள், அண்ணி வேடங்கள் கொடுக்கிறார்கள். தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். கவுசல்யா பெங்களூருவை சேர்ந்தவர். இவருடன் நடிக்க வந்த நடிகைகள் அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. கவுசல்யா திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்தார்.
 
தற்போது அவர் திருமணத்துக்கு தயாராகிறார். மலையாள படப்பிடிப்பில் கலந்து கொள்ள கேரளா சென்ற கவுசல்யா விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளேன். என் மனதுக்கு பிடித்த ஒருவரை மணக்க இருக்கிறேன். எனது பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்க்க தொடங்கி உள்ளனர். விரைவில் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.மேலும் அவர் கூறும்போது, “நிறைய இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்வது எனக்கு பிடிக்கும். கேரளாவில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது. இங்குள்ள புட்டும் கடலையும் எனக்கு பிடித்த உணவு” என்றார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo