Onetamil News Logo

 நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக துபாயில் காலமானார் 

Onetamil News
 

 நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக துபாயில் காலமானார்   


 துபாய் பிப் 24 :  நடிகை ஸ்ரீதேவி(55) மாரடைப்பு காரணமாக துபாயில்  காலமானார். 1967-ல் கந்தன் கருணை படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் உடன் இணைந்து நடித்தவர் ஆவர்.                                                                                                               
                                                                                                                                                 ஸ்ரீதேவி 13 ஆகஸ்ட்  1963 - 24 பெப்ரவரி 2018 தமிழ்நாட்டில் பிறந்து இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற ஒரு நடிகை ஆவார். 1967ல் கந்தன் கருணை திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார். கதாநாயகியாக இவர் நடித்த முதல் படம் கே. பாலச்சந்தரின் மூன்று முடிச்சு (1976). ஆரம்ப காலத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது நடிப்பிற்காக தமிழ் நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், நான்கு முறை பிலிம்பேர் விருதினையும் வென்றுள்ளார்.
கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் நாள் சனிக்கிழமை இரவு துபாயில் மாரடைப்பு காரணமாக காலமானார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo