Onetamil News Logo

நடிகை ஸ்ரீதேவியின் உடல் மகாராஷ்டிர அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது

Onetamil News
 

நடிகை ஸ்ரீதேவியின் உடல் மகாராஷ்டிர அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது


மும்பை மார்ச் 1 ;
மும்பையில் செலிப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வைக்கப்பட்டுள்ள நடிகை ஸ்ரீதேவி உடலுக்கு திரையுலகினர், நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஸ்ரீதேவி உடலுக்கு அஞ்சலி செலுத்த இந்தி திரை உலகைச் சேர்ந்தவர்கள் ஏராளமாக திரண்டு வந்திருந்தனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் திணறினார்கள். ரசிகர்கள் செல்போன், காமிரா எடுத்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது.இடையிடையே திரை உலக பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். மதியம் 12.30மணி வரை ரசிகர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டது.
சல்மான் கான், ஐஸ்வர்யா ராய் பச்சன், சுஸ்மிதா சென்,வெங்கடேஷ், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, சர்தா கபூர், வித்யா பாலன், ரேகா, அஜய் தேவ்கான் - கஜோல்,தபு, திரைப்பட இயக்குனர் சுபாஷ் காய், திரைப்பட தயாரிப்பாளர் ரமேஷ் சிப்பி, ஜான் ஆபிரகாம், பிரேம் சோப்ரா, ராஜ்குமாரர் ராவ், தீப்தி நாவல், சஞ்சய் லீலா பன்சாலி, சோஹா அலி கான், நேஹா துபியா, குணல் கெம்மு, அர்பாஸ் கான், விவேக் ஓபரோய், ஜய பிராடா, அக்ஷய் கன்னா, சஞ்சய் கபூர் ஆகியோர்  வந்து அஞ்சலி செலுத்தினர்.
மதியம் 1 மணிக்கு ஸ்ரீதேவி உடலுக்கு போனி கபூர் குடும்பத்தினர் இறுதிச் சடங்குகள் நடத்தினர்.  2 மணிக்கு பிறகு ஸ்ரீதேவி இறுதி ஊர்வலம் தொடங்கியது.இந்நிலையில் ஸ்ரீதேவியின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட வாகனத்தில் இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. இந்த வாகனம் முழுக்க முழுக்க வெள்ளைநிற சம்பங்கி பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரை நட்சத்திரங்களும் ரசிகர்களும் பங்கேற்றுள்ளனர்.முன்னதாக ஸ்ரீதேவியின் உடலுக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டு மகாராஷ்டிர அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஸ்ரீதேவி உடலை தகனம் செய்ய மும்பை வில்லேபார்லி மேற்கு பகுதியில் எஸ்.வி.சாலையில் உள்ள வில்லே பார்லி சேவா சமாஜ் தகன மையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஸ்ரீதேவி உடல் தகனம் செய்யப்படுகிறது.மகாராஷ்டிர அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo