Onetamil News Logo

கைத்துப்பாக்கி ஆறு தோட்டாக்கள் எடுத்து செல்ல அறிவுரை,கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ. பூமிநாதனின் இல்லத்திற்கு சென்று அவரின் புகைப்படத்திற்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மரியாதை   

Onetamil News
 

கைத்துப்பாக்கி ஆறு தோட்டாக்கள் எடுத்து செல்ல அறிவுரை,கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ. பூமிநாதனின் இல்லத்திற்கு சென்று அவரின் புகைப்படத்திற்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மரியாதை   


திருச்சி 2021 நவம்பர் 24 ;திருச்சியில் கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ. பூமிநாதனின் இல்லத்திற்கு சென்று அவரின் புகைப்படத்திற்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள சோழன் மாநகர் பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன் இவர் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி ரோந்து பணியில் இருந்த பொழுது அதிகாலை ஆடுதிருடிச் சென்றவர்களை விரட்டி கொண்டு கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டி அருகே பிடித்துள்ளார் அப்போது ஆடு திருடியவர்கள் பூமிநாதனை சரமாரியாக வெட்டி கொன்றனர். இதில் சம்பவ இடத்திலேயே பூமிநாதன் உயிர் இழந்தார்.இந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாநகரில் உள்ள பூமிநாதன் வீட்டிற்கு நேரில் வந்து பூமிநாதன் உருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதோடு அவரது மனைவி கவிதா மகன் குகன்பிரசாத் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சைலேந்திரபாபு கூறியதாவது;- பூமிநாதன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருந்து வீரமரணம் அடைந்துள்ளார். அவர் தமிழக முதல்வர் பதக்கம் பெற்றுள்ளார் என்றும்,
 
தீவிரவாத கமாண்டோ பயிற்சி பெற்றதாகவும் கடமை உணர்வுடன் வீரமும் விவேகத்துடன் செயல்பட்டு உள்ளார் என்றும் 15 கிலோமீட்டர் தூரம் ஆடு திருடர்களை விரட்டி சென்றதோடு அவர்களை பிடித்து அவரிடம் இருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்து பாதுகாப்புடன் நடந்து கொண்டார்.சட்டப்படி தான் அவர் நடந்துள்ளார் என்றும், சிறுவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது முக்கிய குற்றவாளி தாக்குதல் நடத்துவார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை என்றும், எதிர்பாராதவிதமாக தாக்குதல் நடத்தப்படும் பூமிநாதன் வீர மரணம் அடைந்தார். தமிழ்நாடு காவல்துறையின் கடமை மிக்க காவல்துறை வீரமிக்க காவல்துறை விவேகம் மிக்க காவல்துறை என்றும், சிறுவர்களிடம் கவனத்துடன் அன்போடு நடந்து கொண்டுள்ளார்கள் என்று கூறியதோடு பூமிநாதன் இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு தமிழக முதல்வர் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் அறிவித்துள்ளார். மேலும் அவரது மகனுக்கு வாரிசு வேலை அடிப்படையில் வேலை வழங்குவதற்கு அறிவித்து உள்ளதற்கு தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
மேலும் காவல்துறை ஆரம்பிக்கப்பட்ட 1856 ஆண்டு முதலே தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த துறை சவால் மிக்கது என்றும், உயிருக்கு பாதுகாப்பு இல்லாத துறை அதை எப்படி எதிர் கொள்கிறோம் என்பதுதான் அதுதான் பூமிநாதன் எதிர்கொண்டுஉயிர் தியாகம் செய்து தனது கடமையை நிறைவேற்றி உள்ளார். இது போன்று நடக்காமல் இருப்பதற்கு காவல்துறைக்கு ஆயுத பயிற்சி கைத்துப்பாக்கி பயிற்சிகள் அதிகாரிகள் மட்டத்தில் இரண்டு மாதமாக கொடுக்கப்பட்டு வருவதாகும் கைது தாக்கியதோடு, அவர்களுக்கு 6 தோட்டாக்கள் வழங்கப்பட வேண்டும், குற்றவாளிகள் காவல்துறையினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும்போது ஆயுத பிரயோகம் செய்யலாம் என்பது சட்டம் சொல்வதாகும், சட்டத்தை மதித்து துப்பாக்கிகளை பயன்படுத்த தயங்க கூடாது என்றும், இவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் என்றும், இவர் சிறுவர்களிடம் அன்போடு பேசி உள்ளார் என்றும், இந்த நிகழ்வு ஒரு அபூர்வமான நிகழ்வு என்று கூறலாம், சிறுவர்கள் சீர் திருத்துவதற்கு என 86 மையங்கள் உள்ளதாகவும்,
 
மேலும் 52 கிளப்புகளை ஆரம்பிப்பதற்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும், மாவட்ட அளவிலும் பள்ளிகள் உள்ளதாகவும், இதில் காவல்துறை விளையாட்டு விழா நடத்துவது குற்றத்திலிருந்து வெளிக்கொண்டு வருவது உள்ளிட்டவை நடத்தப்படுவதாகவும்,மேலும் சம்பவம் நடந்தபோது மணிகண்டன் மது அருந்தியுள்ளான். மேலும் சம்பவம் நடந்த போது தான் லக்னோவில் இருந்ததாகவும் இருந்தாலும் உடனுக்குடன் திருச்சி கமிஷனர், ஐஜி, டிஐஜி ஆகியோர் தங்களுக்கு உரிய அனைத்து தகவல்களையும் வழங்கினார்கள் என்றும், 15 கிலோமீட்டர் தூரத்தில் சென்று ஆடு திருடர்களை பிடித்து ஆயுதத்தையும் பறிமுதல் செய்துள்ளார். ஆடு திருடர்களின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். அப்போது திடீரென ஆயுதத்தால் தாக்கப்பட்டதால் பூமிநாதன் இறந்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஒரு கோடி நிவாரண தொகையும் பணி வழங்குவதாகவும் அறிவித்தார்.
1856 ஆண்டிலிருந்து காவல்துறை மீது தாக்குதல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் முக்கியம். இறந்த பூமிநாதன் உயிர்த்தியாகம் செய்து கடமையை காப்பாற்றியுள்ளார்.
ரோந்து பணியில் செல்வார்கள் கைத்துப்பாக்கி ஆறு தோட்டாக்கள் எடுத்து செல்ல அறிவித்துள்ளோம். உயிரை காப்பாற்றிக்கொள்ள துப்பாக்கியை பயன்படுத்த தயங்க கூடாது என்று தெரிவித்துள்ளோம். சிறுவர்கள் குற்றச்செயல்களை தடுப்பதற்கும் பல முயற்சிகள் நடக்கிறது,
52 சிறார் கிளப்புகள் ஆரம்பிப்பதற்கு திட்டம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. குற்றவாளி மணிகண்டன் மது அருந்தி இருந்துள்ளார்.இந்த கொலைக் குற்றத்தில் மூன்று பேர்தான் ஈடுபட்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.மேலும் 100% மூன்று பேர்தான் குற்றவாளிகள் என்றும், இவர்கள் ஆதாரத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளார்கள் என்றும், புலன் விசாரணை மூலம் தெரியவருவதாகவும், மேலும் வீடியோ ஆதாரம் உள்ளது என்றும் சந்தேகப்பட வேண்டிய அவசியம் கிடையாது என்றும் கூறினார். இந்த பகுதிகள் ஆடு திருட்டு பெரிய அளவில் நடந்து வந்ததாகவும் தற்போது நடப்பது மிக குறைவாக என்றும் ஒரு மணிக்கு ஆடு திருட்டு நடப்பதாக தகவல்கள் பெயரில்தான் போனார் என்றும்,
அவர் ஆடு திருட்டு சிறியது என நினைக்காமல் அதை இழந்தவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று கடமை உணர்வுடன் செயல்பட்டார் என்றும் கூறினார். மேலும் ஆடுகள் திருட்டை ஒட்டுமொத்தமாக அளிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மேலும் ஆடு திருடர்களிடமிருந்து ஆடுகளை வாங்குபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், திருச்சி சிட்டி கமிஷனர் கார்த்திகேயன், டிஐஜி சரவண சுந்தர், திருச்சி சுஜித் குமார் ஆகியோர் பூமிநாதன் உருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.தொடர்ந்து பூமிநாதன் பணிபுரிந்த திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்துள்ள நவல்பட்டு காவல் நிலையத்திற்குச் சென்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo