Onetamil News Logo

தொண்டர் இயக்க மாநில தலைவரும்,சமூக ஆர்வலருமான வக்கீல் தொண்டன் சுப்பிரமணிக்கு கொரோனா தொற்று பாசிட்டிவ்  உறுதி 

Onetamil News
 

தொண்டர் இயக்க மாநில தலைவரும்,சமூக ஆர்வலருமான வக்கீல் தொண்டன் சுப்பிரமணிக்கு கொரோனா தொற்று பாசிட்டிவ்  உறுதி 


சென்னை  2020 அக்டோபர் 16 ;பல்வேறு வழிகளில் சமுகப்பணிகளை மேற்கொண்டுவரும் தொண்டர் இயக்க மாநில தலைவர் வக்கீல் தொண்டன் சுப்பிரமணி கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த தொற்றுக்கு சமீபகாலமாக முன்களப்பணியார்கள், மக்கள் பிரதிநிதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தேசிய அளவில் அமித் ஷா, எடியூரப்பா உள்ளிட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அதிகளவில் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த  நிலையில் தொண்டர் இயக்க மாநில தலைவரும்,சமூக ஆர்வலருமான வக்கீல் தொண்டன் சுப்பிரமணிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.அவர் சென்னை அரசு மருத்துவமணை தீவிர சிகிசைப்பிரிவில் சிகிக்சை பெற்றுவருகிறார்.
கொரோனா வைரஸ் தொற்று நோய் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலக நாடுகளில் பல அரசியல் தலைவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களான காவலர்கள் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அதே நேரத்தில், மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.க்கள் அமைச்சர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 10க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதே போல, தமிழகத்தில் நேற்று நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி செல்வராஜுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், சிவகங்கை தொகுதி எம்.பி.யும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo