Onetamil News Logo

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பின்னர் முதல்முறையாக  இந்தியா வந்தார்.

Onetamil News
 

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பின்னர் முதல்முறையாக  இந்தியா வந்தார்.


அகமதாபாத் 2020 பிப்ரவரி 24 ;அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதல்முறையாக இந்தியா வந்தார், ஆமதாபாத் விமான நிலையத்தில் மனைவி மெலனியாவுடன் பகல் 11.37 மணிக்கு ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் வந்திறங்கிய ட்ரம்ப்பை பிரதமர் மோடி வரவேற்றார். ட்ரம்ப்பை கட்டித்தழுவியும் மெலனியாவை கைலுக்கியும் மோடி வரவேற்றார். ட்ரம்ப் மகள் இவாங்கா , மருமகன் குஷ்னர் மற்றும் அமெரிக்க உயரதிகாரிகளும் ட்ரம்ப்புடன் வந்தனர்.
விமான நிலையத்தில் பாரம்பரிய நடனம், இசையுடன் ட்ரம்ப் மற்றும் குடும்பத்தினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆமதாபாத்தில் உள்ள காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு ட்ரம்ப் சென்றார். அதைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் 22 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஊர்வலமாக செல்கின்றனர்.
இந்த ரோட்ஷோவில் 1 லட்சத்துக்கு அதிகமானோர் பங்கேற்று மோடி - டிரம்ப்பை வரவேற்கின்றனர். வழியெங்கும் பல மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தை பறைசாற்றும் நடனம் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
ரோட் ஷோ மொடேரா motera கிரிக்கெட் ஸ்டேடியத்தை அடைந்ததும் அங்கு நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் இரு தலைவர்களும் உரையாற்றுகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo