Onetamil News Logo

அ.இ.அதிமுக 49வது ஆண்டு துவக்க விழா ;மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன்  எம்எல்ஏ தலைமையில் எம்ஜி ஆர், ஜெ. படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை 

Onetamil News
 

அ.இ.அதிமுக 49வது ஆண்டு துவக்க விழா ;மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன்  எம்எல்ஏ தலைமையில் எம்ஜி ஆர், ஜெ. படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை 


தூத்துக்குடி 2020 அக் 17 ;அ.இ.அதிமுக 49வது ஆண்டு துவக்க விழா.மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ தலைமையில் எம்ஜி ஆர், ஜெ. படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டினார்கள்.
அதிமுக 49 நிறுவன தினம் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக அலுவலகம் அமைந்துள்ள டூவிபுரம் 7வது தெருவில் அலங்கரிக்கப்பட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி பழைய முனிசிபல் வளாகத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வளாகத்தில் அமைக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார். இந்நிகழ்விற்கு மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட இணைச்செயலாளர் செரினா சி.த பாக்கியராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் சந்தனம், வசந்தாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவருமான இரா.சுதாகர், மாநில அமைப்பு சாரா ஒட்டுனரணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் ராஜசேகர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வக்கீல் வீரபாகு, மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் வி.பி.செல்வகுமார் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் தட்டார்மடம் ஞானபிரகாசம், மாவட்ட மகளிரணி செயலாளர் குருத்தாய், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர்  யூ.எஸ். சேகர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக்.ராஜா, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே.ஜே. பிரபாகர், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர் விக்னேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலளார் அருன்ஜெபக்குமார் மாநகரப் பகுதி கழக செயலாளர்கள் வடக்குப்பகுதி பொன்ராஜ், தெற்குப் பகுதி பி.என்.ராமகிருஷ்ணன் மத்திய வடக்குப்பகுதி ஜெய்கணேஷ், மத்திய தெற்கு பகுதி நட்டார்முத்து, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சத்யா லட்சுமணன் ஒன்றிய கழக செயலாளர்கள் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு அழகேசன், ஸ்ரீவைகுண்டம் மேற்கு காசிராஜன், ஆழ்வார்திருநகரி கிழக்கு விஜயகுமார், மேற்கு ராஜ்நாராயணன், கருங்குளம்  வடக்கு ஒன்றிய செயலாளர்  லட்சுமண பெருமாள்,  தூத்துக்குடி  கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜவஹர், மற்றும் பேரூராட்சி கழக நாசரேத் கிங்ஸ்லி, ஏரல் பேரூராட்சி செயலாளர் அத்திப்பழம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் முத்துகணி ரமேஷ் கிருஷ்ணன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர்  அரசு கூடுதல் வழக்கறிஞர் கோமதி மணிகண்டன்,  வக்கீல்முனியசாமி மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் வெயிலுமுத்து, துணைத்தலைவர் பிராங்கிளின், மாவட்ட மகளிரணி இணைச்செயலாளர் ஞானபுஷ்பம், முத்துமதி, துணைத் தலைவர் இந்திரா, மாவட்ட இலக்கிய இணைச்செயலாளர் ஜான்சன் தேவராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர்  மைதீன்,  இணைச் செயலாளர்  இம்ரான்,  மாவட்ட  இளைஞர் பாசறை  தலைவர்  சுந்தரேஸ்வரன்,  பொருளாளர்  பரிபூரணராஜா, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பாஸ்கர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச்செயலாளர்கள் கல்விகுமார், லட்சுமணன், துணை செயலாளர் பிஜேசி சுரேஷ்,  முன்னால் மாமன்ற உறுப்பினர்கள் கோல்டன், சாந்தி, மெஜிலா, மகளிர் அணி சண்முகத்தாய், இந்திரா, ஸ்மைலா,  சாந்தி தூத்துக்குடி மாநகர வட்ட கழக செயலாளர்கள் சுடலைமணி, முருகன், ஜனார்த்தனன், எஸ்.கே.முருகன், அருண்ஜெயக்குமார், ஜெகதீஷ்வரன், முத்துவீரன், சங்கர், கொம்பையா, வெங்கடேஷ், மனுவேல், சுதாகர், மணிகண்டன், அசோகன், உலகநாத பெருமாள், எஸ்.பி.பிரபாகரன், ரவீந்திரன், பூரணச்சந்திரன், செல்வராஜ், தவசிவேல், கமலஹாசன், மகேஷ்குமார்,  பகுதி இளைஞரணி செயலாளர் திருச்சிற்றம்பலம், பகுதி வர்த்தக பிரிவு செயலாளர்  பட்டுராஜா, பகுதி மாணவரணி செயலாளர் மதன், பகுதி அவைத் தலைவர்கள் நடராஜன், ரெங்கன், மணி அப்துல்லா தகவல் தொழிநுட்ப பிரிவு ஜான்சன், முனியப்பன், துரை சேவியர் நாராயணன் கண்ணன் ஸ்டீபன் உட்பட பெருந்திரளான கழகத்தினர் கலந்துகொண்டனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo