Onetamil News Logo

தூத்துக்குடியில் அஇஅதிமுக 50வது பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்,  விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் பங்கேற்பு, மேற்கு பகுதி கழக செயலாளர் முருகன் நன்றியுரை 

Onetamil News
 

தூத்துக்குடியில் அஇஅதிமுக 50வது பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்,  விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் பங்கேற்பு, மேற்கு பகுதி கழக செயலாளர் முருகன் நன்றியுரை 


தூத்துக்குடி 2021 செப் 11;தூத்துக்குடியில் அஇஅதிமுக 50வது பொன்விழா ஆண்டு கொண்டாட்டம், தூத்துக்குடி தனியார் மண்டபத்தில் நடந்த விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் பங்கேற்பு, மேற்கு பகுதி கழக செயலாளர் முருகன் நன்றியுரையாற்றினார்.                                                                                                                     தூத்துக்குடியில் அஇஅதிமுக 50வது பொன்விழா ஆண்டு கொண்டாட்ட கூட்டத்தில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஓதுக்காமல் அதிமுகவிற்கு ஓதுக்க வேண்டும்,நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் மாவட்டம் முழுவதும் முழுமையான வெற்றிக்கு உழைப்பது, ஜெயலலிதா பல்கலைக்கழகம் பெயர் மாற்றத்தை ரத்து செய்வது, தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் பூங்காவில் எம்.ஜி.ஆர் சிலை வைப்பது,உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன 
                  அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஓருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் ஆலோசனைப்படி, மற்றும் உள்ளாட்சி தேர்தல் குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை தலைமை வகித்தார்.                  மாவட்ட எம்.ஜி,ஆர் மன்ற துணைச் செயலாளர் ஜோதிமணி, பகுதி எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சாமுவேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சேவியர், ஆகியோர் வரவேற்புரையாற்றினார்கள்.
           இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும்,கழக அமைப்பு செயலாளருமான சி.த.செல்லப் பாண்டியன் பேசியதாவது...
 கடந்த சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை எந்த தொண்டனும் மனநிறைவோடு ஏற்றுக்கொள்ளவில்லை காரணம் சில குறைபாடுகள் தான். இனி வரும் காலங்களில் அது நடைபெறாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.வரும் உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மேயர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் அதற்கு அனைவரும் பாடுபட வேண்டும்.அதிமுக 50 வது ஆண்டு பொன்விழாவில் மாநகர் முழுவதும் கொண்டாடப்படும். தொண்டர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க நான் தயார்.  இவ்வாறு அவர் பேசினார்.
               கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ நீலமேகவர்ணம்,முன்னாள் அவைத்தலைவர் அந்தோணி சேவியர், மாவட்ட பொருளாளர் திருச்செந்தூர் அமலிராஜன், சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் தூத்துக்குடி மைதீன், முன்னாள் ஒன்றிய செயலாளர் செங்கான், ஜெ பேரவை செயலாளர் காயல் அன்வர், தலைமை கழக பேச்சாளர் கருணாநிதி, தூத்துக்குடி முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர் ரத்தினம், முன்னாள் நிர்வாகிகள் அரசகுரு, தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர்கள் பொன்ராஜ், ஜெயக்குமார், சகாயராஜ், கோல்டன், சர்மிளா அருள்தாஸ், முருகேசன், தமிழரசி, ஆனந்தகுமார், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் ஞானபுஷ்பம், திருமணி, மேரி, முன்னாள் வட்டச்செயலாளர்கள் சகாயராஜ், திருமணி, கருப்பசாமி, கெய்னஸ், தமிழரசன், ரெங்கன், வட்டப்பிரதிநிதிகள் டைமன் ராஜ், சுப்புராஜ், வட்டச் செயலாளர் பழனிச்சாமி பாண்டின், ஜெ பேரவை துணைச்செயலாளர் ஜீவா பாண்டியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.மேற்கு பகுதி கழக செயலாளர் முருகன் நன்றியுரை ஆற்றினார்.                                                                                                                                                            தூத்துக்குடியில் அஇஅதிமுக 50வது பொன்விழா ஆண்டு கூட்டத்தில் தூத்துக்குடி அதிமுக  மாவட்ட கழக செயலாளர் சண்முகநாதன் அவர்களை தாக்கு,தாக்கு என்று தாக்கினார்கள், நீ என்ன செல்லப்பாண்டியன் ஆளா? சண்முகநாதன் ஆளா? என்று கேள்வி கேட்பார்கள் கூட்டத்தில் பல்வேறு அனல் பறக்கும் வார்த்தைகளை 50க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் மைக்கில் அள்ளி வீசினார்கள். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo