Onetamil News Logo

2021 -ல் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி என்று ஓ.பி.எஸ் இன்று அறிவித்தார்.

Onetamil News
 

2021 -ல் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி என்று ஓ.பி.எஸ் இன்று அறிவித்தார்.


சென்னை 2020 அக்டோபர் 7 ;2021 -ல் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி என்று ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும் இணைந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து அறிவித்தனர் 
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் குவியும் தொண்டர்கள் முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் விடிய விடிய அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியபின்னர் இன்று கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை சந்திக்க ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அ.தி.மு.க. பொறுத்தவரை, சமீபத்தில் உயர்நிலை குழு கூட்டமும், செயற்குழு கூட்டமும் நடைபெற்றது.
 கடந்த 10 நாட்களாக எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம், ஓ.பன்னீர்செல்வம் விருப்பப்படி, 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதிமுக முதல்வர் வேட்பாளர் இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதன் படி வழி காட்டுதல் குழுவில் 

✅1. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

✅2. அமைச்சர் தங்கமணி

✅3. அமைச்சர் எஸ் பி வேலுமணி

✅4. அமைச்சர் ஜெயக்குமார்

✅5. அமைச்சர் சிவி சண்முகம்

✅6. அமைச்சர் காமராஜ்

✅7. கே.சி.டி.பிரபாகரன்

✅8.மனோஜ் பாண்டியன்

✅9. பா மோகன்

✅10. கோபாலகிருஷ்ணன்

✅11. சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம்

ஆகியோர் செயல்படுவார்கள்.
முன்னதாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தங்களது இல்லங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள். இந்த நேரத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ, கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோர் சென்றார்கள். 
அதேபோல், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு, அமைச்சர் டி.ஜெயக்குமார், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்றனர். அவர்களும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo