அஇஅதிமுக சார்பில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் S.S வீரபாண்டி அஇஅதிமுக தலைமை கழத்தில் விருப்பமனு தாக்கல் செய்தார்.
சென்னை 2021 பிப்ரவரி 25 ; விளாத்திகுளம் சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக சார்பில் போட்டியிட ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் S.S வீரபாண்டி அஇஅதிமுக தலைமை கழத்தில் விருப்பமனு தாக்கல் செய்தார்.
தேர்தலில் போட்டியிட விருப்பமனு; அதிமுக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு ;
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதால் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகின்றவர்கள் பிப்ரவரி 24 முதல் மார்ச் 5ம் தேதி வரை விருப்பமனுக்கள் அளிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதிமுக, விருப்பமனு தாக்கல் செய்ய அறிவிப்பு, தமிழ்நாடு, சட்டமன்றத் தேர்தல் 2021, சட்டப்பேரவை தேர்தல், கேரளா, புதுச்சேரி, அஇஅதிமுக, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு நெருங்கி வரும் நிலையில், ஆளும் அதிமுக தேர்தலில் போட்டியிட விரும்பும் தங்கள் கட்சியினர் பிப்ரவரி 24 முதல் விருப்பமனுக்கள் அளிக்கலாம் என்று திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே மாநிலத்தில் ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இரு கட்சிகளும் தேர்தல் பணிக்குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுக்களை அமைத்து மும்முரமாக பணியாற்றி வருகின்றன.
இந்த நிலையில், அதிமுக தலைமை முந்திக்கொண்டு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதால் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகின்றவர்கள் பிப்ரவரி 24 முதல் மார்ச் 5ம் தேதி வரை விருப்பமனுக்கள் அளிக்கலாம் என்று அறிவித்துள்ளது.