Onetamil News Logo

அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டுவதற்கு இடைக்கால தடை விதித்தது கோர்ட்

Onetamil News
 

அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டுவதற்கு இடைக்கால தடை விதித்தது கோர்ட்      


       பெங்களூரு: அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின்னர் அக் கட்சியில் ஏற்பட்ட அதிகார பலத்தால் பல்வேறு பிரச்சனைகள் உருவானது.இதனால் இரண்டு அணிகள் அ.தி.மு.க.வின் அம்மா மற்றும் புரட்சித்தலைவி அம்மா அணிகள் உருவாகியது,இரண்டு அணிகள் இணைந்தது ஆனால் புதிய ஒரு அணி  பிரிந்து அவை 19 எம்.எல்.ஏ க்கள் கொண்ட தினகரன் ஆதரவு அணியாக மாறியது.
 நாளை அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற இருந்தது. இதற்கான வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
பொதுக்குழு கூட்டுவதற்கு பொதுச்செயலாளர் மற்றும் துணைப் பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்பதால் நாளை நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என அவர் கூறியிருந்தார். தனி நீதிபதி கார்த்திகேயன் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து வெற்றிவேல் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் ராஜீவ் ஷக்தர், அப்துல் குத்தூஸ் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்த அதேசமயம், பெங்களூரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அ.தி.மு.க. மாநில செயலாளர் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், பொதுக்குழுவை கூட்டுவதற்கு தடை விதிக்கும்படி கூறியிருந்தார். மனுவை பரிசீலித்த நீதிபதி, அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டுவதற்கு இடைக்கால தடை விதிப்பதாக அறிவித்தார். மேலும், வழக்கின் விசாரணையை அக்டோபர் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo