Onetamil News Logo

72வது குடியரசு தின விழா தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர்  N. சுப்பிரமணியன்  தேசிய கொடியை ஏற்றி வைத்தார் 

Onetamil News
 

72வது குடியரசு தின விழா தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர்  N. சுப்பிரமணியன்  தேசிய கொடியை ஏற்றி வைத்தார் 


தூத்துக்குடி 2021 ஜன.27 ;தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று 72வது குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவிற்கு விமான நிலைய இயக்குனர்  N. சுப்பிரமணியன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து பாதுகாப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.  அதன்பின் சமாதான புறா பறக்க விடப்பட்டது. விழாவில் விமான நிலைய இயக்குனர்  சிறப்புரையாற்றினார். சிறப்புரையில் விமான நிலைய வளர்ச்சி பணிகள் நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாகவும் கூடுதல் விமானங்கள் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் விமான நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.  பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த கலை நிகழ்ச்சியில் விமான நிலைய ஊழியர்களும், இண்டிகோ நிறுவன பணியாளர்களும் விமான நிலைய பாதுகாப்பு காவல்துறை ஊழியர்களும் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளும் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகளும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.  விழாவில் நிலைய மேலாளர்  S. ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo