Onetamil News Logo

தமிழ்நாடு வேலைவாய்ப்புகளில்  தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் AIYF கோரிக்கை ;மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் P. சந்தானசேகர் பங்கேற்பு 

Onetamil News
 

தமிழ்நாடு வேலைவாய்ப்புகளில்  தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் AIYF கோரிக்கை ;மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் P. சந்தானசேகர் பங்கேற்பு 


தூத்துக்குடி 2020 செப் 28 ; தமிழ்நாடு வேலைவாய்ப்புகளில்  தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் AIYF கோரிக்கை விடுத்துள்ளது.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மாவீரன் பகத்சிங் பிறந்த நாளான இன்று எங்கே? எனது வேலை? என்ற முழக்கத்தோடு தூத்துக்குடி சிதம்பரம் நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் P. சந்தானசேகர் தலைமை தாங்கினார் 
 ஆர்ப்பாட்டத்தில் 
1) தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணிகளில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
 2) டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெளிமாநிலத்தவர் பங்கேற்கலாம் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் 3 )படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு நிவாரணம் மாதம் ரூ5000 வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழப்பபட்டது
 ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் தோழர் S P ஞானசேகர், தோழர் T. சுப்புரமணியன் மற்றும்  AIYF தோழர்கள் பெருமாள், பலவேசம் ,காளீஸ்வரன், சேகர், ஜெயக்குமார், பரமசிவன். உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo