Onetamil News Logo

தூத்துக்குடியில் மிரல வைத்த அஜித் ரசிகர்கள் விவேகம் திரைப்பட முதல் நாள் காட்சி  

Onetamil News
 

தூத்துக்குடியில் மிரல வைத்த அஜித் ரசிகர்கள் விவேகம் திரைப்பட முதல் நாள் காட்சி  தூத்துக்குடி ஆகஸ்ட் 24 ;                                                                                               
தூத்துக்குடியில் மிரல வைத்த அஜித் ரசிகர்கள் விவேகம் திரைப்பட முதல் நாள் காட்சி அதிகாலையில் கிளியோபட்ரா திரையரங்கில் திரையிடப்பட்டது ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரத்தோடு பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.                                                                                                                                                        
திரைப்பட விமர்சனம்: விவேகம்                                                                                அஜீத்தும் இயக்குநர் சிவாவும் தொடர்ச்சியாக இணைந்து உருவாக்கியிருக்கும் மூன்றாவது படம், அஜீத்குமார் நடிக்க வந்து 25வது வருடத்தில் வந்திருக்கும் படம், முழுக்க முழுக்க ஐரோப்பாவில் எடுக்கப்பட்ட படம் என "விவேகம்" அஜீத்தின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருக்கும் அணுகுண்டுகளை வெடிக்கச்செய்து ஒரு நிலநடுக்கத்தை உருவாக்கும் கும்பல், மேலும் இரண்டு அணுகுண்டுகளை வெடிக்கச் செய்யத் திட்டமிடுகிறது. அதனைத் தடுக்க செர்பியாவில் உள்ள ஒரு பயங்கரவாத எதிர்ப்புப் படை (உளவுப் படை?) ஒன்று களமிறங்குகிறது.
திரைப்பட விமர்சனம்: விவேகம்
அதன் சார்பில் செயலில் இறங்குகிறார் அஜய்குமார். நடாஷா என்ற ஹேக்கரால்தான் அதனை தடுக்க முடியும் என அவளைத் தேட, அவள் கொல்லப்படுகிறாள்.
இந்தக் கட்டத்தில் ஆர்யன் உள்ளிட்ட நண்பர்கள்தான் இதன் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது. அவர்களை முறியடித்து எப்படி அணுகுண்டை அஜய்குமார் செயலிழக்கச் செய்கிறார் என்பதுதான் மீதிக் கதை.

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நாயகன் அறிமுகமாவதைப் போல ஒரு பெரிய ஆக்ஷன் காட்சியில் அறிமுகமாகிறார் அஜீத்குமார். ஒரே ஒரு வித்தியாசம். ஜேம்ஸ் பாண்ட் படங்களில் அந்த சண்டை எதற்காக, யாருடன் நடக்கிறது, எப்படி நடக்கிறது என்பது தெளிவாகப் புரியும். விவேகத்தில் கண்ணைக் கட்டி பனிக் காட்டிற்குள் விட்டதைப் போல இருக்கிறது.
சரி, துவக்கம்தான் இப்படி, படம் வேறு மாதிரி இருக்கும் என்று காத்திருந்தால் அதிலும் ஏமாற்றம். படம் துவங்கியதிலிருந்து முடிவதுவரை தொடர்ந்து யாராவது யாரையாவது சுட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.
எந்த நாட்டின் உளவு முறியடிப்பு அல்லது பயங்கரவாத முறியடிப்புப் படை அணுகுண்டை செயலிழக்கச்செய்யும் பணியில் இறங்குகிறது? அந்த நாட்டில் அரசு என்ற ஒன்றே இருக்காதா?

20, 30 பேர் சேர்ந்து எந்திரத் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். அஜீத் மேல் ஒரு குண்டுகூட படுவதில்லை. மிகப் பெரிய அணைக்கட்டிலிருந்து கீழே குதிக்கும் அஜீத், கீழே விழுந்துகொண்டிருக்கும்போது 
வில்லனாக வரும் விவேக் ஓபராய் ; படம் முழுக்க, அஜீத்தைப் பற்றி பஞ்ச் வசனங்களைப் பேசிக்கொண்டேயிருக்கிறார்.

"ஒரு வழி இருந்தாலே அவன் ஆடுவான். அறுபது வழி இருக்கு அடங்கவே மாட்டான்", "அஜய்குமார் உங்க பார்வையில் படக்கூடாது என்று முடிவுபண்ணீட்டா, அவன் நிழலைக்கூட உங்களால நெருங்க முடியாது", "போராடாம அவன் போகவும் மாட்டான், சாகவும் மாட்டான்" - இதெல்லாம் வில்லன் அஜீத்திற்காக சொல்லும் பஞ்ச் வசனங்கள். இது தவிர, அஜீத் கேமராவைப் பார்த்து பேசும் பஞ்ச் வசனங்கள் தனி.
ஒரு படம் முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகளாலும் ஆக்ஷன் காட்சிகளாலும் நிறைந்திருப்பது பிரச்சனையில்லை. ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் வகை திரைப்படங்கள் அப்படித்தான் இருக்கின்றன. ஆனால், அந்த சண்டையும் ஆக்ஷனும் யார் - யாருக்கிடையில், எதற்காக நடக்கின்றன என்பதில் ஒரு தெளிவு இருக்கும். 
கேம் ஆஃப் த்ரோன்ஸ் உள்பட முக்கிய தகவல்களை கசியவிட்டு பணம் கேட்டு மிரட்டும் ஹேக்கர்கள்
படம் நெடுக, இடத்தின் பெயர், நேரம் போன்றவற்றை எழுத்தில் காண்பிக்கிறார்கள். ஆங்கிலத்தில் வரும் அந்த வார்த்தைகளைப் படிப்பதற்கு முன்பாக அவை நீங்கிவிடுகின்றன. படம் பார்ப்பவர்கள் படித்துவிடக்கூடாது என்றால் அதை எதற்காக காண்பிக்க வேண்டும்?

இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளுக்காகவும் ஆக்ஷன் காட்சிகளுக்காகவும் அஜீத் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது மட்டுமே படத்தின் நினைவாக எஞ்சக்கூடும்.
அதன் சார்பில் செயலில் இறங்குகிறார் அஜய்குமார். நடாஷா என்ற ஹேக்கரால்தான் அதனை தடுக்க முடியும் என அவளைத் தேட, அவள் கொல்லப்படுகிறாள்.
இந்தக் கட்டத்தில் ஆர்யன் உள்ளிட்ட நண்பர்கள்தான் இதன் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது. அவர்களை முறியடித்து எப்படி அணுகுண்டை அஜய்குமார் செயலிழக்கச் செய்கிறார் என்பதுதான் மீதிக் கதை.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo