அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 12 காளைகளை தழுவி முதல் பரிசு பெற்ற விராட்டிபத்து கிராமத்தை சேர்ந்த கண்ணன் ;அரசு வேலை வழங்க வலியுறுத்துவேன் ஜான்பாண்டியன் பேச்சு
மதுரை 2021 ஜனவரி 17 ; உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 12 காளைகளை தழுவி முதல் பரிசு பெற்ற விராட்டிபத்து கிராமத்தை சேர்ந்த கண்ணன் அவர்களுக்கு அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவரும்,தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் தலைவரும் தமிழினவேந்தர் புரட்சியாளர் பெ.ஜான்பாண்டியன் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
பின்னர் தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்குவது போன்று தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.இது தொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்து சகோதரர் கண்ணன் அவர்களுக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்துவேன் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் தலைவர் ஜான்பாண்டியன் உறுதியளித்தார்.