ஆல் பாஸ் செய்துவிட்டது அரசாங்கம் ;ஆன்லைன் வகுப்புகள் தேவையா? சீர்கெட்ட பாதைகளில் சிறுவர்கள் ;புலம்பும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்
சிபிஎஸ்சி ,மெட்ரிக்,ஆங்கிலவழி போன்ற பள்ளிகளில் கட்டாய கட்டண வசூல் செய்து ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை,இன்று ஆன்லைன் வகுப்புகளால் என்ன? புரோஜனம் சீர்கெட்ட பாதைகளில் சிறுவர்கள்... ஏழைக் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் செல் போன் வாங்கித் தராததால் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டன..?
தனியார் பள்ளி ஆசிரியர்கள் சார்பாக முதல்வரிடம் வேண்டுகோள்: கொரோனா காலத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கீழ்நிலைக்கு சென்றுவிட்டது.
மாணவர்களின் நலன் கருதி இந்நிலையை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும், தற்போது 25.02.21 அன்று அறிவித்த 9, 10 ,11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமல் அனைவரும் தேர்ச்சி என்ற செய்தி, எங்களை மேலும் முற்றிலும் அழித்து விடும்படியாக உள்ளது.
இச்செய்தி அரசுப்பள்ளிக்கு பொருத்தமாக இருக்குமே தவிர, அரசு வேலை கிடைக்காமல் தனியார் பள்ளியை நம்பி இருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு நிச்சயம் பெருஞ்சுமையாக இருக்கும்,
தனியார் பள்ளிகள் வழங்கும் குறைவான ஊதியத்தில் பிழைப்பு நடத்தும் எங்களின் வாழ்க்கை இனிமேல் கேள்விக்குறியாக உள்ளது உங்களது இந்த அறிவிப்பு.
இந்த அறிவிப்பைக் கேட்ட பெற்றோர்கள் மாணவர்களின் கல்விக்கட்டணத்தை கட்ட மறுப்பார்கள், பள்ளி நிர்வாகமும் பணமில்லை என்ற வார்த்தையை சொல்லி தரக்கூடிய ஊதியத்தைக் குறைப்பார்கள்.
இந்த அறிவிப்பை திரும்ப பெறச்செய்வதோ எங்கள் நோக்கமல்ல, எங்களின் வாழ்வாதாரம் மேலோங்கிட மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டுகிறோம்.
பணமோ, பொருளோ கொடுக்கச் சொல்லவில்லை நாங்கள், பள்ளிகளை தொடர்ந்து நடத்த ஏற்பாடு செய்தால் தற்போது கிடைக்கும் ஊதியமாவது எங்களுக்கு கிடைக்கும், விதி 110 ன் கீழ் புதிய புதிய அறிவிப்புகளை வழங்கும் நீங்கள் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய வகையில் வழிவகை கூறினால் ,எங்களின் வாழ்வும் சிறிது மேம்படும்.
மாணவர்களின் நலனில் அக்கறையோடு செயல்படும் முதல்வர்,மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியர்களின் நலனிலும் அக்கறை செய்திட வேண்டுகிறோம்.
வரக்கூடிய தேர்தலில் ஜனநாயக முறைப்படி நாங்களும் எங்களது வாக்குகளைச் செலுத்த உள்ளோம்.
கண்ணீருடன் நன்றியை காணிக்கையாக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களில் நானும் ஒருவன்.இவ்வாறு சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.