Onetamil News Logo

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள்  மூடப்பட்டிருக்க வேண்டும் -  மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,தகவல்

Onetamil News
 

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள்  மூடப்பட்டிருக்க வேண்டும் -  மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,தகவல்


தூத்துக்குடி 2020 செப் 28 ; காந்தி ஜெயந்தியை முன்னிட்டு  வரும் 02ம் தேதி  அன்று  தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள்  மூடப்பட்டிருக்க வேண்டும் -  மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிவிப்பு ;காந்தி ஜெயந்தியை    02.10.2020 அன்று தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை/பார்) விதிகள், 2003 பிரிவு 12 துணை விதி (1)-இன்  படி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபானக்கடைகளுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் எப்.எல்.2, எப்.எல்.3 ஆகிய உரிமத்தலத்திலான பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். மேற்படி நாளில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் அன்றையதினம் மதுபான விற்பனை நடைபெறக்கூடாது. 
மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo