Onetamil News Logo

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் அனைத்து உரிமைகளும் மத்திய அரசால் பறிக்கப்பட்டுள்ளது.  வருகின்ற 2021-ம் ஆண்டு தமிழகத்தை மீட்டெடுக்கும் தேர்தலாக அமையும் என்று கனிமொழி எம்.பி. பேச்சு 

Onetamil News
 

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் அனைத்து உரிமைகளும் மத்திய அரசால் பறிக்கப்பட்டுள்ளது.  வருகின்ற 2021-ம் ஆண்டு தமிழகத்தை மீட்டெடுக்கும் தேர்தலாக அமையும் என்று கனிமொழி எம்.பி. பேச்சு 


உடன்குடி 2020 நவம்பர் 21 ;திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட காயல்பட்டினம் நகராட்சி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் உடன்குடி அருகேயுள்ள தண்டுபத்தில் நடந்தது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் ம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். 
சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு பேசியதாவது:-
             வருகின்ற 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல், தமிழக மக்களை அனைத்து துயரங்களிலிருந்தும் மீட்கும் தேர்தலாக அமையும். அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் அனைத்து உரிமைகளும் மத்திய அரசால் பறிக்கப்பட்டுள்ளது. மத்திய பா.ஜனதா அரசின் அனைத்து மக்கள் விரோத திட்டங்கள், சட்டங்களை அ.தி.மு.க. அரசு ஆதரித்து வருகிறது. விவசாயிகளை வஞ்சிக்கும் வேளான் சட்டங்களையும், மக்களை மதரீதியாக பிளவுபடுத்தும் பா.ஜ.க.வின் நடவடிக்கைகளையும் அ.தி.மு..க அரசு மறைமுகமாக ஆதரிக்கிறது. இந்த ஆட்சியினால் தமிழகத்தின் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் விரோத இந்த அரசை தமிழக மக்கள் 2021 சட்டமன்றத் தேர்தலில் அகற்ற வேண்டும். அதற்கு இப்போதே தேர்தல் பணியை முழுமையாக தொடங்குங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo