Onetamil News Logo

தீராத நோய் தாக்கியவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம் ; சுப்ரீம் கோர்ட் உத்தரவு 

Onetamil News
 

தீராத நோய் தாக்கியவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம் ; சுப்ரீம் கோர்ட் உத்தரவு 


புதுடெல்லி மார்ச் 12 ;
தீராத நோய் தாக்கியவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம். மனிதர்கள் கண்ணியத்துடன் இறப்பதற்கு உரிமை உண்டு. கருணைக்கொலை செய்வதற்கு வழிமுறைகளையும் வகுத்து சுப்ரீம் கோர்ட்  உத்தரவிட்டது.                                                                                                                                                                                                                      தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, முக்கியத்துவம் வாய்ந்த இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கருணைக் கொலை செய்ய அனுமதி கோரும் வழக்கில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவச் சிகிச்சையால் காப்பாற்ற இயலாதவர்களை, சில விதிமுறைகளுக்கு உட்பட்டு, மரணிக்க அனுமதிக்கலாம் என கூறியுள்ள நீதிபதிகள், மீள முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கண்ணியமாக இறப்பதற்கு உரிமை உண்டு என குறிப்பிட்டுள்ளனர். 

இதனால், உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லாதவர்களுக்கு, செயற்கை சுவாசம் உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்படுவதை நிறுத்தலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo