அதிதூதர் மிக்கேல் கெபித்திருவிழா ;மாப்பிள்ளையூரணி ஊராட்சித் தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு
தூத்துக்குடி 2023 செப் 29 ;தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட ஜாகிர் உசேன் நகரில் புனிதமிக்கேல் அதிதூதர் திருவிழா நடைபெற்றது. புனித மிக்கேல் அதிதூதர் கெபித்திருவிழாவை முன்னிட்டு அந்தப் பகுதியைச் சார்ந்த வின்சிலா பொறுப்பேற்று அந்த பகுதியில் அன்னதானத்தை நடத்திட ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சித் தலைவரும்,தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் பங்கேற்று அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நிகழ்வில் நிஷாந்த்,மேரி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். இந்த நிகழ்வில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா,தங்க மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.