Onetamil News Logo

அம்மா பன்னை பசுமை நுகர்வோர் அங்காடியில் ரூ 45 க்கு பெரிய வெங்காயம் விற்பனை ;மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, பார்வை

Onetamil News
 

அம்மா பன்னை பசுமை நுகர்வோர் அங்காடியில் ரூ 45 க்கு பெரிய வெங்காயம் விற்பனை ;மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, பார்வை


தூத்துக்குடி 2020 அக்டோபர் 29 ;தூத்துக்குடியில் கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்படும் அம்மா பன்னை பசுமை நுகர்வோர் அங்காடியில் பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டார்.
தூத்துக்குடியில் கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்படும் அம்மா பன்னை பசுமை நுகர்வோர் அங்காடியில் பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  செய்தியாளர்களுடன் சென்று இன்று பார்வையிட்டார். 
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பெரிய வெங்காயத்தில் விலை  அதிக அளவில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே பொதுமக்களின் சிரமத்தினை போக்குவகையில் தமிழக முதல்வர் அவர்கள் பெரிய வெங்காயத்தினை கொள்முதல் செய்து கூட்டுறவு அங்காடிகள் மூலம் குறைந்த விலையில் விற்பதற்கு உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இனையம், தேசிய கூட்டுறவு விற்பனை இனையத்தின் மூலம் நாசிக்கில் இருந்து அதிக அளவில் பெரிய வெங்காயத்தினை கொள்முதல் செய்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு அனைத்து மாவட்டத்திற்கும் விநியோகம் செய்யப்பட்டது. 
தேசிய கூட்டுறவு விற்பனை இனையம் மூலம் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இனையத்திற்கு கொண்டு வரப்பட்ட பெரிய வெங்காயம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு நேற்றைய தினம் 10 டன் பெரிய வெங்காயம் அனுப்பபட்டுள்ளது. மேலும் அடுத்த கட்டமாக ஓரிரு தினங்களில் 25 டன் கொண்டு வருவதற்கான  ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. கூட்டுறவு விற்பனை இனையத்தின் மூலம் பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.45 என்ற சலுகை விலையில் நிர்னயம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் வெளியே சந்தைகளில் ரூ.100ல் இருந்து ரூ.120 வரை விற்பனை செய்கிறார்கள். நமது தமிழக அரசின் சார்பாக பெரிய வெங்காயம் ரூ.45க்கு விற்பனை செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அம்மா பன்னை பசுமை நுகர்வோர் அங்காடியில் மட்டும் 3.2 டன்  அளவிற்கு பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவை அதிகம் உள்ள காரணத்தால் ஒரு நபருக்கு 2 கிலோ என்று நிர்னயிக்கப்பட்டு; விற்பனை செய்யபட்டு வருகிறது.  மேலும் தூத்துக்குடி மதரா கோட்ஸ் சுய சேவை பிரிவு, துறைமுகம் பகுதி, லயன்ஸ் டவுன் பகுதி, முத்துகிருஷ்ணாபுரம், மாப்பிள்ளையூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டுறவு விற்பனை இனையத்தின் மூலம் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை துவக்கப்பட்டுள்ளது. இன்று காலை மட்டும் 2 மணிநேரத்தில் 2 டன் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அது படிப்படியாக இருப்பு குறைந்தவுடன் அடுத்தபடியாக 25 டன் பெரிய வெங்காயம் வரும். இதேபோன்ற நமது மாவட்டத்தில் இருக்கின்ற ரேசன் கடைகளுடன் இணைந்துள்ள அம்மா மினி சூப்பர் மார்கெட் மூலமாகவும் பெரிய வெங்காயம் விற்பனை உடனடியாக துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ரவிசந்திரன், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய மேலாண்மை இயக்குநர் அந்தோணி,மேலாளர் ராஜதுரை மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo