Onetamil News Logo

திருச்சியில் விபத்தில் பலியான மூதாட்டி நல்லடக்கம் செய்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர்!

Onetamil News
 

திருச்சியில் விபத்தில் பலியான மூதாட்டி நல்லடக்கம் செய்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர்!
 

திருச்சி 2021 செப் 24 ;விபத்தில் பலியான மூதாட்டி நல்லடக்கம் செய்த அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர்!
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கோஅபிஷேகபுரம் திருச்சி மேற்கு வட்ட எல்லைக்குட்பட்ட வெஸ்ட்ரி பள்ளியிலிருந்து  மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள சங்கம் ஹோட்டல் அருகே 19-9-2021 அன்று இரவு சுமார் 2-30 மணி அளவில் நடந்து சென்ற சுமார் 76 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத மூதாட்டி மீது அச்சாலையில் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் சென்ற அடையாளம் மற்றும் எண் தெரியாத வாகனம் மோதி இரண்டு கால்களிலும் பலத்த அடிபட்டு  கிடக்கையில் தனது பெயர் தனம் என கூறி மயங்கியுள்ளார்.அப்பொழுது வயலட் கலரில் ஆரஞ்சு கலர் பார்டர் போட்ட புடவையும் ஆரஞ்சு கலர் ஜாக்கெட்டும் அணிந்திருந்தார். அவருடைய வலது முன் கையில் பூ பச்சை குத்தப்பட்டு இருந்தது அவரை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார் மேற்பட்ட நபரை காவல்துறையினர் விசாரிக்கையில் அவருடைய விலாசம் மற்றும் அவரைப் பற்றிய விவரம் தெரியவில்லை பிறகு 
19-9-2021 ஆம் தேதி  தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சிகிச்சை பலனின்றி 
19-9-2021 இறந்து உள்ளார் மேற்படி நபரின் உடற்கூறாய்வு திருச்சி அரசு மருத்துவமனையில் 24-9-2021 அன்று நடைபெற்றது.தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலைய தலைமைக் காவலர் மலர்ச்செல்வன் நல்லடக்கம் செய்வதற்காக திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமாருக்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி அண்ணா நகர் குமுழிக்கரை மயானத்தில் தலைமை காவலர் மலர்ச்செல்வன் முன்னிலையில் இறந்த நபருக்கு இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்யப்பட்டது.
 அனாதை பிரேதங்கள் நல்லடக்க உதவிக்கு
 யோகா ஆசிரியர் விஜயகுமார்
 வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார்
 அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை 
14,பிஷப் குளத்தெரு,
புத்தூர், திருச்சி-17.
செல் 98424 12247
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo