Onetamil News Logo

தூத்துக்குடியில் வீட்டருகே இருசக்கரவாகனத்தை நிறுத்துவதில் இன்று இரவு முதியவர் வெட்டிக்கொலை

Onetamil News
 

தூத்துக்குடியில் வீட்டருகே இருசக்கரவாகனத்தை நிறுத்துவதில் இன்று இரவு முதியவர் வெட்டிக்கொலை


தூத்துக்குடி 2021 அக்டோபர் 17;தூத்துக்குடியில் வீட்டருகே இருசக்கரவாகனத்தை நிறுத்துவதில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.                                                                                                                                            தூத்துக்குடி ராஜகோபால் நகர் 8வது தெரு பகுதியில் வசிப்பவர்கள் பெருமாள் கோனார் மகன்கள் ஆவுடையப்பன் (60),சுப்பையா (55) சகோதரர்களுக்குள் கடந்த பல ஆண்டுகளாக மனப்புழுக்கம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சுப்பையா (55). இவர் தனது இரு சக்கர வாகனத்தை, ஆவுடையப்பனின் வீட்டின் முன்பு நிறுத்தி கழுவிக் கொண்டு இருந்தாராம். இதனை ஆவுடையப்பன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பெருமாள் கோனார் மகன் சுப்பையா கோனார் மகன்கள் பிரகாஷ்(21), ராம்ஜெயந்த் (18) ஆகிய மூவரும் சேர்ந்து ஆவுடையப்பனை  அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
        இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தூத்துக்குடி சிப்காட் காவல்நிலைய போலீசார் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அணுப்பிவைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பையாவை கைது செய்தனர். மேலும் அவரது மகன்கள் பிரகாஷ், ராம் ஜெயந்த் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo