மனைவியை மெழுகுச் சிலையாக வடித்து;இல்ல கிரகப்பிரவேசம் வைத்த அதிசய கணவர்
ஆந்திரா 2020 ஆகஸ்ட் 11 ;மனைவியை மெழுகுச் சிலையாக வடித்து ; இல்ல கிரகப்பிரவேசம் வைத்த அசத்திய அதிசய கணவருக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.
ஆந்திர மாநிலத்தில் ஓர் அருமையான மனிதர் தன் மனைவியை மெழுகுச் சிலையாக வடித்து தன் இல்ல கிரகப்பிரவேசத்திற்கு அனைவரையும் அழைத்து விழா நடத்தியுள்ளார்.ஆந்திராவில் உள்ள ஒரு கணவர். இவருடைய மனைவி 10 வருடங்களுக்கு முன் விபத்தில் இறந்து விட்டார். அவரது மனைவியின் தலைமையில் தான் நடக்க வேண்டும் என்று தத்ரூபமாக மெழுகுச் சிலையாக வடித்து விழா நடத்தி உள்ளார்.
சொந்த வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்த ஆசைப்பட்ட மனைவியின் ஆசையை நிறைவேற்றிய கணவனை ஆந்திரா முழுவதும் கண்ணீரோடு வாழ்த்தியது.மனைவியை போல் மெழுகு பொம்மை செய்து கிரகப்பிரவேசத்தில் உக்கார வைத்து அவரை கௌரவித்தார்.