Onetamil News Logo

டி.எஸ்.பி. ஆன மகளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் தந்தை சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான சம்பவம்

Onetamil News
 

டி.எஸ்.பி. ஆன மகளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் தந்தை சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான சம்பவம்


ஆந்திரா 2021 ஜனவரி 4 ;டி.எஸ்.பி. ஆன மகளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் தந்தை சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான சம்பவம் ஆந்திராவில் நடைபெற்றுள்ளது.
ஆந்திரா காவல்துறையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஒய் ஷியாம் சுந்தர். இவரது மகள் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தி 2018-ல் நடந்த காவலர் தேர்வில் வெற்றிப்பெற்று துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். பணியின் அடிப்படையில் பார்த்தால் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தி அவரது தந்தையை விட உயர் அதிகாரி ஆவார்.
இந்நிலையில் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்தி திருப்பதியில்  நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தார். அப்போது ஜெஸ்ஸி பிரசாந்தியின் வருகையைக் கண்ட ஷியாம் சுந்தர், பணியின் அடிப்படையில் அவருக்கு சல்யூட் அடித்தார்.
இந்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தனது மகளுக்கு சல்யூட் அடித்தது தொடர்பாக கூறியுள்ள ஷியாம் சுந்தர்,  தனக்கு இது பெருமையான விஷயம் என தெரிவித்துள்ளார். வீட்டில் தான் அப்பா-மகள் உறவு எல்லாம் என்றும், பணியின்போது மகள் தனது உயர் அதிகாரி என்றும் அவர் பெருமிதம் அடைந்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள ஜெஸ்ஸி பிரசாந்தியும், தனக்கு இது பெருமையான நிகழ்வே எனக் கூறியுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo