Onetamil News Logo

ஸ்ரீசித்தர் பீடத்தில் குரு மகாலிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேக விழா வெகு கோலாகலம்..! விவசாயம், செல்வம் கொழிக்க சிறப்பு வழிபாடு..!!

Onetamil News
 

ஸ்ரீசித்தர் பீடத்தில் குரு மகாலிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேக விழா வெகு கோலாகலம்..!
விவசாயம், செல்வம் கொழிக்க சிறப்பு வழிபாடு..!!


தூத்துக்குடி 2021 அக்டோபர் 20; தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் தென்தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத சிறப்பாக சிவபெருமான் குருமகாலிங்கேஸ்வரராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ஜப்பசி மாத பவுர்ணமி நாளில் குரு மகாலிங்கேஸ்வரரை அன்னாபிஷேகம் செய்து வணங்கினால் வறட்சி, பஞ்சம் நீங்கும், பக்தர்களின் வாழ்வில் செல்வவளம் சிறக்கும் என்பது ஐதீகமாகும்.
இதன்படி ஜப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று குருமகாலிங்கேஸ்வரரான சிவபெருமானுக்கும், நந்திக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் மற்றும் அன்னத்தால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து குருமகாலிங்கேஸ்வரர் அன்னாபிஷேகத்துடன் கூடிய சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்க சிறப்பு வழிபாடுகள் ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வெகுகோலாகலமாக நடைபெற்றது.
தொடர்ந்து, பருவமழை நன்குபெய்து விவசாயம் செழிக்கவேண்டியும், கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாமல் போகவும், பக்தர்கள் வாழ்வில் செல்வங்கள் பெருகிடவும் வேண்டி ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவருக்கு யாகம் மற்றும் மஞ்சள், சந்தனம், இளநீர், பால் உள்ளிட்ட 16வகையான அபிஷேக வழிபாடுகளும், தீபாராதனையும் நடைபெற்றது.
அன்னாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. வழிபாடுகளுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில், சித்தர்பீடத்தினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo