Onetamil News Logo

புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் ;மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் 

Onetamil News
 

புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் ;மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் 


தூத்துக்குடி 2020 அக்டோபர் 24 ;தூத்துக்குடி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் நிரப்பப்பட உள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
      இதுகுறித்து அவரது அறிவிப்பு ;தூத்துக்குடி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் நிரப்பப்பட உள்ளதால்  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்திற்கு தொகுப்பூதியமாக ரூ.8,000/- (ரூபாய் எட்டாயிரம் மாதமொன்றிற்கு) வழங்கப்படும். விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குழந்தை சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குழந்தை சார்ந்த பணியில் ஒருவருட முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது.  
மேற்காணும் பணியிடத்திற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் விளக்ககுறிப்புகள் (www.thoothukudi.nic.in)   என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதற்கென அமைந்த படிவத்தில் பூர்த்தி செய்து கல்வி, வயது மற்றும் முன்அனுபவம் குறித்த சான்றிதழ்களின் நகல்களுடன் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, 176, முத்துச் சுரபி பில்டிங், மணிநகர் 2வது தெரு, பாளை ரோடு, தூத்துக்குடி 628 003. தொலைபேசி எண்;: 0461 -  2331188 என்ற முகவரிக்கு 18.11.2020 அன்று மாலை 05.30 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo