சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு, பரிசளிப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரென்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கு சேதுக்குவாய்த்தான் ஊராட்சி மற்றும் ராஜபதி D.லெட்சுமணபெருமாள் கல்வி அறக்கட்டளையும் இணைந்து பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு சேதுக்குவாய்த்தான் ஊராட்சிதலைவர் சீ.சுதாசீனிவாசன் தலைமை வகித்தார். S.சதாம் உசேன் அனைவரையும் வரவேற்றார்.
குருகாட்டூர் ஊராட்சி மன்ற தலைவரும் ஊராட்சி ஒன்றியசெயலரும் AP ராணிராஜ் குமார், தொகுப்புரை ஆற்றினார்கள். இவ்விழாவில் அறக்கட்டளையின் நிறுவன தலைவர் T.தங்கவேல்பூபதி, கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்கள். சிறப்பு விருந்தினர்களாக மேலாத்தூர் ஊராட்சி தலைவரும் ஆழ்வை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான A.P சதிஸ்குமார் மற்றும் ராஜபதி ஊராட்சி தலைவர் T.செளந்திரராஜன், சேதுக்குவாய்த்தான் முன்னாள் ஊராட்சிதலைவர் S.மோகன், கிராம நிர்வாக அலுவலர்,T.கண்ணன் திமுக மாவட்டபிரதிநிதி P.மோகன் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.
இவ்விழாவில் அனைத்து வாா்டு உறுப்பினர்கள் மற்றும் மகளிர் குழுவினர் பொதுமக்கள் முக்கியபிரமுகர்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவில் வழக்கறிஞர் பா.சீனிவாசன் நன்றியுரை வழங்கினார்.