தமிழ்நாடு பனை வாரியத்தின் தலைவர் A. நாராயணன் -க்கு பாராட்டு விழா,53 வியாபாரிகள் சங்கங்கள் சென்னையில் ஏற்பாடு
தமிழ்நாடு பனை வாரியத்தின் தலைவர் A. நாராயணன் -க்கு பாராட்டு விழா,53 வியாபாரிகள் சங்கங்கள் சென்னையில் ஏற்பாடு
சென்னை தண்டையார்பேட்டை செல்வராணி மகாலில் வைத்து வடசென்னையில் இருக்கக்கூடிய 53 வியாபாரிகள் சங்கங்கள் சேர்ந்து தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவராக எர்ணாவூர் A. நாராயணன் அவர்களை நியமித்ததற்காக தமிழக முதல்வர் அவர்களுக்கும் இந்தப் பதவியில் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு பனை வாரியத்தின் தலைவர் A. நாராயணன் அவர்களுக்கும் சிறப்பான பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவிலே நீதியரசர் தமிழ்நாடு திடக்கழிவு மேலாண்மையினுடைய தலைவர் நீதிபதி ஜோதிமணி அவர்களும் வாலிபர் சங்கங்களுடைய பாதுகாவலர் வெள்ளையன் அவர்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.