அரசியல் சதுரங்கம் திரைப்படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது, 100 க்கும் மேலான தூத்துக்குடி நடிகர்கள் நடித்திருக்கும் படம்
தூத்துக்குடி 2022 ஜனவரி 6;திரைப்பட நடிகர் கிங் காங் மற்றும் ஜி. பி .முத்து ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள அரசியல் சதுரங்கம் திரைப்படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது, இன்றைய அரசியல் சூழ்நிலையை காமெடியாக காட்சிப்படுத்தியிருக்கிறார் புதுமுக இயக்குனர் பிராட்வே சுந்தர். இந்த திரைப்படத்தில் பிரகாஷ் ராமானுஜம் கதாநாயகனாக அறிமுகமாகிறார் , விஷ்ணு மூவி மேக்கர்ஸ் காசி விசுவநாதன் தயாரித்திருக்கும் இந்த படத்தில் வக்கீல் செங்குட்டுவன், சுமங்கலி சதீஷ், சுகந்தி கோமஸ், மகி, நாணல் ராஜ், ஜேபி பாலன் மற்றும் 120 க்கும் மேலான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் தணிக்கை குழுவினர் யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள, இந்த திரைப்படத்தில் இணை இயக்குனராக நிலா கார்த்திக் மற்றும் உதவி இயக்குனர்களாக ராஜா லாரன்ஸ், காட்டுப்பூச்சி ஜெகன், அருந்ததி அரசு, பிரகாஷ் ஆகியோர் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்துள்ளனர், மக்களுக்கு காமெடி விருந்தாக பிப்ரவரி மாதத்தில் இந்த திரைப்படம் திரைக்கு வரும் என படத்தின் தயாரிப்பாளர் காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.