Onetamil News Logo

அரியலூரில் மாநில அளவிலான கராத்தே போட்டியை மாவட்ட எஸ்.பி. தொடங்கி வைத்தார்

Onetamil News
 

அரியலூரில் மாநில அளவிலான கராத்தே போட்டியை மாவட்ட எஸ்.பி. தொடங்கி வைத்தார்


அரியலூர் 2019 செப் 29 ;அரியலூர் மாவட்டம் அரியலூரில் மாநில அளவிலான கராத்தே  போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கியோஷி  செல்லபாண்டியன் தலைமையில் அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் போட்டியை துவக்கி வைத்தார்.
அராஷி டோ சங்கர் வரவேற்புரை ஆற்றி அனைவரையும் வரவேற்றார். கியோஷி ராஜகோபால் கியோஷி வினோத் சென்சாய் பிரபு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மாநில அளவில்  அராஷி டோ இஷின்றியு கராத்தே கழகம் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் திருவாரூர், காஞ்சிபுரம், கும்பகோணம், சென்னை, கடலூர் உள்ளிட்ட  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 600 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சான்றிதழ்களையும் பரிசுகளை அள்ளிச் சென்றனர். முடிவில் அரியலூர் மாவட்ட வில்வித்தை கழக பயிற்சியாளர் குருமூர்த்தி நன்றி கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo