Onetamil News Logo

ஆயுதப்படை காவலர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் தாலுகா காவலர்களாக பணி மாற்றம் செய்யப்பட்டு அதற்கான பணியாணை உத்தரவினை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று வழங்கினார்.  

Onetamil News
 

ஆயுதப்படை காவலர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் தாலுகா காவலர்களாக பணி மாற்றம் செய்யப்பட்டு அதற்கான பணியாணை உத்தரவினை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று வழங்கினார்.  


தூத்துக்குடி 2021 பிப்ரவரி 28 ;தூத்துக்குடி ஆயுதப்படை காவலர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் தாலுகா காவலர்களாக பணி மாற்றம் செய்யப்பட்டு அதற்கான பணியாணை உத்தரவினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் 148 காவலர்கள் இன்று 26.02.2021 அன்று தாலுகா காவலர்களாக நியமனம் செய்து, அவர்களை தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களின் அடிப்படையிலும், அவர்களின் சீனியாரிட்டி அடிப்படையிலும் தூத்துக்குடி  உட்கோட்டத்திற்கு 4 காவலர்களும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்திற்கு 13 காவலர்களும், மணியாச்சி உட்கோட்டத்திற்கு 21 காவலர்களும், கோவில்பட்டி உட்கோட்டத்திற்கு 27 காவலர்களும், சாத்தான்குளம் உட்கோட்டத்திற்கு 13 காவலர்களும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்திற்கு 17 காவலர்களும், திருச்செந்தூர் உட்கோட்டத்திற்கு 19 காவலர்களும், விளாத்திக்குளம் உட்கோட்டத்திற்கு 34 காவலர்களும் மொத்தம் 148 காவலர்கள் அவர்கள் விருப்பமனு அடிப்படையில் மேற்படி காவல் நிலையங்களுக்கு பணி நியமனம் செய்யப்பட்டனர்.
பல்வேறு காவல் நிலையங்களில் புதிதாக பணியேற்க உள்ள காவலர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பணி ஆணை வழங்கி தாலுகா காவல் நிலையங்களில் அவர்களது பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தார்.
           
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo