Onetamil News Logo

கோவில்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி பலி என தகவல் ;காஷ்மீர் லடாக் பகுதியில் வாகனம் விபத்து 

Onetamil News
 

கோவில்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி பலி என தகவல் ;காஷ்மீர் லடாக் பகுதியில் வாகனம் விபத்து 


காஷ்மீர் லடாக் 2020 நவம்பர் 19 ;காஷ்மீர் லடாக் பகுதியில்  பனிச்சறுக்கில் வாகனம் விபத்து ஏற்பட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி என்பவர் பலி என தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் சண்முகா நகரை சேர்ந்த கந்தசாமி மகன் கருப்பசாமி(34). இவர் கடந்த 14 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். நாயக் பதவி வகித்து வந்துள்ளார்.  காஷ்மீர் லடாக் பகுதியில் பணியாற்றி வந்த கருப்பசாமி இன்று காலை நடந்த விபத்தில் வீரமரணமடைந்துள்ளார். இதுகுறித்த தகவல் ராணுவத்தில் இருந்து கருப்பசாமியின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த கருப்பசாமிக்கு மனைவி தமயந்தி என்ற மனைவியும், கன்யா(7), வைஷ்ணவி(5) ஆகிய மகள்களும், பிரதீப்ராஜ் (1) என்ற மகனும் உள்ளனர். இவர் 2 மாத விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த கருப்பசாமி கடந்த பிப்ரவரி மாதம் தான் மீண்டும் பணிக்கு திரும்பினார் என்பது குறிப்பிடதக்கது. இதனால் அக்கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo