வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 பேர் கைது
செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்ப்பட்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்,உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபபிள்ளை தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செய்துங்கநல்லூர் வாட்டர் டேங்க் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் ஸ்ரீவைகுண்டம் சிவராமங்கலம் பகுதியைச் சேர்ந்த முருகைய்யா மகன் ராமகிருஷ்ணன் (32) மற்றும் ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாரிகந்தன் மகன் சத்தியபாலன் (26) என்பதும் அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் எதிரிகளான ராமகிருஷ்ணன் மற்றும் சத்தியபாலன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட ராமகிருஷ்ணன் மீது ஏற்கனவே குரும்பூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 2 வழக்குகளும், மற்றொரு எதிரி சத்தியபாலன் மீது சென்னை கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.