Onetamil News Logo

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குர்மீத் ராம் ரஹீமின் தத்து மகள் ஹனிபிரீத் இன்சா கைது

Onetamil News
 

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குர்மீத் ராம் ரஹீமின் தத்து மகள் ஹனிபிரீத் இன்சா கைது     



 சண்டீகர்:                                                                                                                 பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குர்மீத் ராம் ரஹீமின் தத்து மகள் ஹனிபிரீத் இன்சானை இன்று போலீஸார் கைது செய்தனர்.
தேரா சச்சா சவுதா என்ற இயக்கத்தின் தலைவராக உள்ளவர் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் ஆவார். இவர் கடந்த 1999-ஆம் ஆண்டு ஹரியாணா மாநிலத்தில் சிர்சா நகரில் ஆசிரமத்தை தொடங்கினார். இங்கு கடந்த 2002-ஆம் ஆண்டு இரு பெண் சீடர்களை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
                                                                                                                                          ராம் ரஹீம் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவுடன் பஞ்சாப் மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் 38 பேர் உயிரிழந்தனர். மேலும் 200 பேர் காயமடைந்தனர். இந்த வன்முறையை தூண்டிவிட்டதே ராம் ரஹீமின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் என்று தகவலறிந்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்த ஆயத்தமாகினர்.
இதனை அறிந்த ஹனிபிரீத் கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் அவர் எங்கும் தப்பி செல்லக் கூடாது என்பதற்காக அவருக்கு எதிராக போலீஸார் லுக் அவுட் நோட்டீஸை விடுத்தனர்.
                                                                                                                            இதனிடையே ஹனிபிரீத் இன்று இந்தியா டுடே நாளிதழுக்கு தலைமறைவாக இருந்தபடியே பேட்டி அளித்திருந்த நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டார். ஹனிபிரீத்துக்கும் ராம் ரஹீமுக்கும் தவறான உறவு உள்ளதாக அவரது முன்னாள் கணவர் விஸ்வாஸ் குப்தா பரபரப்பு புகார் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டை தமது பேட்டியின் மூலம் ஹனிபிரீத் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo