Onetamil News Logo

குலசேகரப்பட்டினத்தில் அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் தசரா தசரா  திருவிழாவுக்கு பொதுமக்கள் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம் ; தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தகவல்

Onetamil News
 

குலசேகரப்பட்டினத்தில் அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் தசரா தசரா  திருவிழாவுக்கு பொதுமக்கள் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம் ; தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தகவல்


தூத்துக்குடி 2020 அக்டோபர் 24 ; குலசேகரப்பட்டடினம் அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோவில் தசரா  திருவிழாவுக்கு பொதுமக்கள் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 17.10.2020 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
கொரோனா தாக்கத்தை கட்டுபடுத்தும் பொருட்டு முதல் நாள் (17.10.2020) மற்றும் 26.10.2020, 27.10.2020 ஆகிய நாட்களில்  திருவிழாவிற்கு பொதுமக்கள் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம் என்று ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை மறுநாள் (26.10.2020) பத்தாம் திருவிழா நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் 26.10.2020 மற்றும் 27.10.2020 ஆகிய இரு நாட்கள் கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வர யாருக்கும் அனுமதி இல்லை என்றும்,
மேலும் பத்தாம் திருவிழா(26.10.2020) அன்று குலசேகரபட்டினம் கடற்கரையில் நடைபெறும்  சூரசம்ஹாரம் இந்த வருடம் குலசேகரப்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் வளாகத்திலேயே நடைபெறவுள்ளது, எனவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடற்கரை பகுதிகளில் யாருக்கும் அனுமதி கிடையாது என்றும், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் குலசை தசரா திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூர் தொலைக்காட்சி  மற்றும் பிரபல தொலைக்காட்சி மற்றும்  You-Tube லும் நேரடியாக ஒளிப்பரப்பபடும்.
 இதனை மீறி  வரும் பக்தர்கள் சோதனை சாவடிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள். ஆகவே பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தந்து 26.10.2020  மற்றும் 27.10.2020 ஆகிய இரு நாட்கள் கோவிலுக்கு வராமல் தங்கள் ஊரிலேயே பக்தர்கள் காப்பை கழட்டி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த ஆலோசனையின் போது தூத்துக்குடி காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி,  திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், தூத்துக்குடி ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர்  கண்ணபிரான், குலசேகரப்பட்டினம் காவல் ஆய்வாளர்  ராதிகா,  மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் அன்னபூரணி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் மீஹா ஆகியோர் உடன் இருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo