Onetamil News Logo

பொறுப்பு இல்லாத பெற்றோரால் லாட்ஜில்  தங்கியிருந்த வாலிபர் தற்கொலை 

Onetamil News
 

பொறுப்பு இல்லாத பெற்றோரால் லாட்ஜில்  தங்கியிருந்த வாலிபர் தற்கொலை 


ஆறுமுகநேரி,  2019 நவம்பர் 30 ;ஆறுமுகநேரியில் லாட்ஜில் வாலிபர் பிணமாக தொங்கினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி ராஜமன்யபுரத்தைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ். இவருக்கு மனைவி மற்றும் 5 மகன்கள். இந்த நிலையில் அந்தோணி ராஜ் தன்னுடைய மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தனியாக பிரிந்து சென்று விட்டார். இதற்கிடையே அவருடைய மனைவியும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவர்களுடைய 5 மகன்களையும் தாத்தா வளர்த்து வந்தார். 5 மகன்களில் மூத்த மகன் விஜய் (வயது 26). இவர் கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவர் ஆறுமுகநேரியில் உள்ள லாட்ஜில் கடந்த 2 மாதங்களாக அறை எடுத்து தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலையில் விஜய் தங்கியிருந்த அறையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து விடுதி ஊழியர்கள், ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்திரகாளி என்ற பவுன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, விடுதி அறையின் கதவை உடைத்து திறந்தனர்.அப்போது விஜய் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் உடல் அழுகிய நிலையில் பிணமாக தொங்கினார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo