Onetamil News Logo

டாஸ்மாக் நிர்வாகம் ஊழலில் சீரழிந்து வருகிறது ஆறுமுகநேரி டாஸ்மாக் கடையில் மாவட்ட மேலாளர் உடந்தையுடன் ரூபாய் 1.86 கோடி அரசு பணம் கையாடல்

Onetamil News
 

டாஸ்மாக் நிர்வாகம் ஊழலில் சீரழிந்து வருகிறது ஆறுமுகநேரி டாஸ்மாக் கடையில் மாவட்ட மேலாளர் உடந்தையுடன் ரூபாய் 1.86 கோடி அரசு பணம் கையாடல்


ஆறுமுகநேரி 2020 செப் 26 ;ஆறுமுகநேரி டாஸ்மாக் கடை எண் 9991-யில் விற்பனையில்லை ; கோடிக் கணக்கில் வற்ற பணம் எங்கே  ? தூத்துக்குடி டாஸ்மார்க் மாவட்ட மேலாளர் உடந்தையா?  என்று பல கேள்விகள் கேட்கப்படுகிறது. 
 தமிழகமெங்கும் மார்ச் 24 க்குப்பிறகு கொரோனா தொற்று பரவலால் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன.அதன் பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஜூலை மாதம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா ஆறுமுகநேரி டாஸ்மாக் கடை9991உள்ளது.கடந்த 2ம் தேதியில் டாஸ்மாக் கடை எண் 9991-ல் மொத்த இருப்பு சரக்கு ரூ2,28,29,220 க்கு இருப்பதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு கணக்கு தெரிவித்தது.கடந்த ஜூலை மாதம் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டபோது கடை எண் 9991க்கு ரூ 1,62,25,460 சரக்கு இருப்பதாக கணக்கு கொடுத்துள்ளனர்..இருப்பு ரூ2,28,29,220, வரவு சரக்கு ரூ 1,62,25,460 சேர்த்து மொத்தம் இருப்பு சரக்கு ரூ 3, 90,54,680க்கு இருக்க வேண்டும்.ஆனால் கணக்கில் இருப்பு சரக்கு மொத்தம் ரூ 2,44,80,600 க்கு மட்டும் இருப்பதாக தெரியவந்ததாம்? மீதி தொகை ரூ1, 45, 14,080 எங்கே சென்றதாம்,என்பது குறித்து விசாரணை செய்துவருகின்றனர்.
இது குறித்து டாஸ்மார்க் மேலாளரிடம் கேட்ட  போது பிரச்சினை க்குரிய அந்த கடையை இன்று 25-09-2020 இரவு வரை டீம் ஆடிட்டிங் செய்து வருகிறோம் என்றார்.                                                                                
                ஆறுமுகநேரி டாஸ்மாக் கடையில் 1.86கோடி கையாடல் சிபிசிஐடி விசாரணை நடத்த ஏஐடியுசி கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் டாஸ்மாக் கடையில் அதிக வருவாய் உள்ள கடைகளில் ஒன்று ஆறுமுகநேரியில் உள்ள 9991 எண் கடையாகும் .இந்த கடைக்கு பணிபுரியவேண்டும் என பல பணியாளர் போட்டி போட்டுக்கொண்டு கையூட்டு கொடுத்து அதிகாரிகளுடன் துணையோடு பணியாற்றி வந்தனர்.இந்த கடையில் தினமும் 7லட்சம் வரை மது விற்பனை நடைபெறும்.விற்பனை  பணத்தை மருநாள் வங்கியில் செலுத்தி வரவேண்டும்.மற்றும் ஒவ்வொரு மாதமும் தணிக்கை செய்யும் அதிகாரிகள் தணிக்கை செய்து சான்று வழங்குவர்.இந்த நிலையில் 31.08 2020 தணிக்கை செய்த அதிகாரிகள் கடை இருப்பு மதுபாணத்திற்க்கும் வங்கியில் செலுத்திய மதுபாண விற்பனை பணத்திற்க்கும் 1.86கோடி வித்தியாசம் இருப்பதை கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் டாஸ்மாக் ஊழியர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் அந்த கடையின் ஊழியர் ஒருவர் தற்கொலைக் முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .மற்றோருவர் டாஸ்மாக் மேலாளர் துணையுடன் தற்போது கடையை நடத்திவருகிறார் என கூறப்படுகிறது.இது குறித்து ஏஐடியுசி டாஸ்மாக் ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் நெல்லை நெப்போலியன் கூறும்போது கடந்த இரண்டு ஆண்டுகாலமாக தூத்துக்குடி டாஸ்மாக் நிர்வாகம் ஊழலில் சீரழிந்து வருகிறது ஆறுமுகநேரி டாஸ்மாக் கடையில் மாவட்ட மேலாளர் தூணை மேலாளர் உடந்தையுடன் ரூபாய் 1.86 கோடி அரசு பணம் கையாடல் செய்யப்பட்டுயிருப்பது வேதனைக்குரியது. விற்பனை பணம் ஆயிரம் குறைந்தாலே  ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் இந்த விஷயத்தில் கண்டும் காணாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.எனவே இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலிஸ் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை ஏஐடியுசி டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo