புத்தூர் கிளை நூலகத்தில்
வீடுகளுக்கே சென்று புத்தகங்கள் விநியோகிக்கும் நூலக நண்பர்கள் திட்ட தன்னார்வலர்களுக்கு புத்தகப் பை அடையாள அட்டை நூல் இரவல் பதிவேடு வழங்கும் நிகழ்ச்சி
புத்தூர் கிளை நூலகத்தில்
வீடுகளுக்கே சென்று புத்தகங்கள் விநியோகிக்கும் நூலக நண்பர்கள் திட்ட தன்னார்வலர்களுக்கு புத்தகப் பை அடையாள அட்டை நூல் இரவல் பதிவேடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார். தென்னூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விமலா முன்னிலை வகித்தார். புத்தூர் கிளை நூலக நூலகர் நூலக நண்பர்கள் திட்ட தன்னார்வலர்களுக்கு புத்தகப்பை, அடையாள அட்டை, நூலக நண்பர்களால் பராமரிக்க வேண்டிய வாசகர்களுக்கான நூல் இரவல் பதிவேடு உள்ளிட்டவற்றை வழங்கி பேசுகையில்,
வீடுகளுக்கே நேரடியாக சென்று புத்தகங்கள் விநியோகிக்க, நூலக நண்பர்கள் திட்டத்துக்கு தன்னார்வலர்களைத் தேர்வு செய்து நூலக நண்பர்களுக்கு அடையாள அட்டை மற்றும் புத்தக பை வழங்கியுள்ளோம். நூலக வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும், நூலகங்களுக்கு வர முடியாத மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் உள்ளிட்டோர், வீடுகளில் இருந்தே நூல்களை வாசிக்க உதவும் வகையில் நூலக நண்பர்கள் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நூலக
தன்னார்வலர்கள் வீடு, வீடாகச் சென்று நூல்களைவழங்கும் பணியில் ஈடுபட வேண்டும். வீடுகளுக்குச் செல்லும்போது நூலக உறுப்பினர்களாக இல்லாதவர்களை, உறுப்பினர்களாகச் சேர்க்கும் பணியையும் மேற்கொள்ளவும்.
நூலக தன்னார்வலர்கள் நூலகத்தில் இருந்து நூல்களைப் பெற்று சென்று நூல்களை விநியோகிப்பது, விநியோகித்த நூல்களைத் திரும்பப் பெற்று வந்து நூலகத்தில் ஒப்படைப்பது ஆகிய பணிகளை மேற்கொள்ளவேண்டும். நூலக உறுப்பினர்களாக இல்லாதவர்களை, உறுப்பினர்களாகச் சேர்க்கும் பணியையும் மேற்கொள்ள வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து நூலக நண்பர்கள் திட்ட தன்னார்வலர்கள் சங்கீதா, கௌசி நிஷா, ஆஷா பர்கத், யுகேந்திரன் உள்ளிட்டோர்க்கு
புத்தகப் பை அடையாள அட்டை நூல் இரவல் பதிவேடு வழங்கப்பட்டது.