Onetamil News Logo

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் வரும் 29ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா

Onetamil News
 

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில்
வரும் 29ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா


தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் வரும் 29ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா 64வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா யாக வேள்வி வழிபாடுகளுடன் கோலாகலமாக நடக்கிறது.
              தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-மஹா காலபைரவர் சித்தர் பீடம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில், தென்தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத சனீஸ்வரர் 11அடி உயரத்தில் ஸ்ரீமங்களம் தரும் சனீஸ்வரராக தனது வாகனமான காகத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
                      ஸ்ரீசித்தர் பீடத்தில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு வரும் 29ம் தேதி காலை முதல் இரவு வரை ஸ்ரீமங்களம் தரும் சனீஸ்வரருக்கு 64வகையான அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை, மஹா யாக வேள்விகளுடன் சிறப்பு வழிபாடுகள் 'சாக்தஸ்ரீ' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலமாக நடக்கிறது.
                           29ம் தேதி(புதன்கிழமை) காலை 8மணிக்கு மங்கள இசை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கன்னிகா பூஜை, லட்சுமி பூஜையுடன் சனிப்பெயர்ச்சி விழா தொடங்குகிறது. காலை 10மணிக்கு மஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவருக்கு ஹோமம் நடக்கிறது.
       அதனைத்தொடர்ந்து, காலை சரியாக 10.51மணிக்கு சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகும் நேரத்தில் ஸ்ரீமங்களம் தரும் சனீஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், குங்குமம், சந்தனம், தேன், நெய், திருநீறு, பஞ்சாமிர்தம் உள்பட 64வகையான அபிஷேகம் சாக்தஸ்ரீசற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வெகுசிறப்பாக நடக்கிறது.

அபிஷேகத்தினை தொடர்ந்து மஹா யாக வேள்வியும், சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனையுடன் சனிப்பெயர்ச்சி வழிபாடுகள் நடக்கிறது. மதியம் 1மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
                  இந்த சனிப்பெயர்ச்சியின்போது கடகம், சிம்மம், விருச்சகம், மகரம், கும்பம், மீனம் ராசிக்குரியவர்கள் கண்டிப்பாக தங்களுக்கான பரிகார வழிபாடுகளை மேற்கொள்ளவேண்டும். இதுபோன்று மீதமுள்ள மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், தனுசு ராசிக்காரர்களும் தங்களது ராசிக்கேற்ற வகையிலான வழிபாடுகளை மேற்கொள்ளவேண்டியது மிகவும் அவசியமாகும்.
              சனிப்பெயர்ச்சியின்போது ரூ.1000 செலுத்தி 94434 04832, 99432 03700 என்ற செல்போன் எண்களில் பெயர்களை முன்பதிவு செய்திடும் பக்தர்கள் தங்களது சனிப்பெயர்ச்சிக்கான பரிகார வழிபாடுகளை தனித்தனியான யாகத்துடன் கூடிய வகையில் செய்திடவும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த வழிபாட்டில் பங்கேற்கும் பக்தர்களுக்கு இல்லத்தில் செல்வ வளம் தரும் சனீஸ்வரர் யந்திரம் வழங்கப்படும்.
         இவ்விழாவில், பக்தர்கள் தவறாமல் பங்கேற்று சனிப்பெயர்ச்சி வழிபாடுகளை மேற்கொண்டு சனீஸ்வரரின் தொல்லைகளில் இருந்து விடுபட்டு வாழ்வில் பேரானந்த பெருவாழ்வு பெற்று இன்புறுமாறு ''சாக்தஸ்ரீசற்குரு சீனிவாச சித்தர்'' கேட்டுக்கொண்டுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo