ஆதீனங்கள், மடாதிபதிகளிடம் ஏக்கர் கணக்கில் இருக்கும் சொத்துகளை நிலமற்ற ஏழைகளுக்கு வழங்க வேண்டும். அதுதான் உண்மையான சமூகநீதி என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
தமிழகத்தில், 62 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. அவற்றில் கட்டணம் மிக அதிகம். இந்த 62 சுங்கச்சாவடிகளில் 32 சுங்கச்சாவடிகள் காலவதியாவிட்டன.
தமிழகத்தில் காலவதியாகியுள்ள 32 சுங்கச் சாவடிகளையும், 60 கி.மீ. தூரத்திற்கு குறைவாக இருக்கும் சுங்க சாவடிகளையும், நகர்புறத்தில் இயங்கும் சுங்கச் சாவடிகளையும் உடனடியாக அகற்றிட வேண்டும்.காலாவதியான சுங்கச்சாவடிகள் அனைத்தும் பணம் வசூலிக்கும் மையங்களாகவே செயல்பட்டு பொதுமக்களிடம் கொள்ளையடித்து வருகின்றன. சுங்கச் சாவடிகள் சாலைகளை சீரமைப்பது போன்ற பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படுவது இல்லை. சட்ட விதிகள் எதையும் முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை. இதை தடுக்க வேண்டிய ஒன்றிய அரசு சுங்கச்சாவடி உரிமையாளர்களோடு கை கோர்த்துக் கொண்டு கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு வருவது கடும் கண்டத்திற்குரியது. தமிழகத்தில் காலவதியாகியுள்ள 32 சுங்கச் சாவடிகளையும், 60 கி.மீ. தூரத்திற்கு குறைவாக இருக்கும் சுங்க சாவடிகளையும், நகர்புறத்தில் இயங்கும் சுங்கச் சாவடிகளையும் உடனடியாக அகற்றிட வேண்டும். "காலாவதியான 32 சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் யாருக்குச் செல்கிறது... இது குறித்து எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும்" என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்திருக்கிறார்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று மதுரைக்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``திண்டுக்கல் அருகே பிறந்தநாளைக் கொண்டாட மாணவிகள் மது விருந்து நடத்தியிருப்பது வேதனை அளிக்கிறது. நாங்கள் தொடர்ந்து மது விலக்கு குறித்துப் பேசி வருகிறோம்.`அக்டோபர் 2-ம் தேதிக்குள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு' என தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும்.
சாதி அடிப்படையில் மாணவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் நாங்குநேரியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டும், போலீஸார் மறுக்கின்றனர். நாங்குநேரியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டால், நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கொடுக்கிறார்கள். உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தப் பிரச்னையில் வேறு எந்தக் கட்சியும் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை.
நாங்குநேரியிலுள்ள வானமாமலை கோயிலுக்குள் செல்ல சாதிய பாகுபடு நிலவுகிறது. ஆதீனங்கள், மடாதிபதிகளிடம் ஏக்கர் கணக்கில் இருக்கும் சொத்துகளை நிலமற்ற ஏழைகளுக்கு வழங்க வேண்டும். அதுதான் உண்மையான சமூகநீதி.
`ஒரே நாடு, ஒரே தேர்தல்' முறையை எவ்வளவு விரைவாக அமல்படுத்த வேண்டுமோ, அவ்வளவு விரைவாக அமல்படுத்த வேண்டும். விகிதாச்சார தேர்தல் முறையில் இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல், சட்டசபைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்தும் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும். எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் பதவிக்காலத்தை நான்கு ஆண்டுகள் எனக் கொண்டுவர வேண்டும்.
பள்ளி, கல்லூரிகளில் சாதிய அடையாள கயிறு கட்டுதல் உள்ளிட்டவற்றை ஒழிக்க வேண்டும். உதயநிதி சனாதனம் பற்றிப் பேசுகிறார். சனாதானம் என்றால் அர்த்தம் என்ன... சனாதானம், ஆரியம், சமூகநீதி போன்ற வார்த்தைகளை அசிங்கப்படுத்துகிறார்கள்.
விழுப்புரம் மாவட்ட கிராமத்தில் கோயிலுக்குள் நுழைய முதலில் அனுமதியுங்கள். மணிப்பூர் பிரச்னைக்குக் கண்டனம் தெரிவித்த தி.மு.க-வினர், நாங்குநேரி பிரச்னையில் உதயநிதியின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெரிவிக்க வேண்டும்.
தமிழகத்தில், 62 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. அவற்றில் கட்டணம் மிக அதிகம். இந்த 62 சுங்கச்சாவடிகளில் 32 சுங்கச்சாவடிகள் காலவதியாவிட்டன. அப்படியென்றால் அங்கு வசூலிக்கப்படும் கட்டணம் யாருக்கு, எங்கே செல்கிறது... எனவே தமிழகத்திலுள்ள சுங்கச்சாவடிகளில் வசூலாகும் கட்டணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இது குறித்து எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும்.
நாங்கள் ரியல் இண்டியன். அதனால் I.N.D.I.A கூட்டணி பற்றி கவலை இல்லை. நீட் தேர்வை ரத்து செய்கிறோம் என தி.மு.க-வினர் மக்களை ஏமாற்றினர். ஆனால், அவர்கள் ரத்து செய்யவில்லை. நீட் தேர்வு வந்த பிறகு ஏழை மாணவ மாணவியர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கிறது.
தி.மு.க-வுக்கு மக்களை ஏமாற்ற வேறு அஜண்டா கிடைக்கவில்லை. எனவே, இன்னும் நீட் குறித்துப் பேசுகின்றனர். தற்போது ராகுல் காந்தி பிரதமரானால் ரத்துசெய்வோம் எனக் கூறுகின்றனர். இனிமேலாவது தி.மு.க-வினர் நீட் ரத்து குறித்துப் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.